.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 4, 2014

‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு




கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்த நிலையில் தள்ளிப் போய் தற்போது இப்படத்தின் இசை இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.


கொச்சடையான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சீனாவில் தங்கி கவனித்து வந்தார். ஆனாலும் திட்டமிட்ட நாட்களுக்குள் இந்த படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 வெளியாகவிருந்த ஆடியோ வெளியீட்டு விழா தள்ளி போனது.அத்துட்ன் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதும் ந்டைபெறவில்லை.


இதற்கிடையில், ‘கோச்சடையான்’ படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் ” ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இசை, பிப்ரவரி 15ம் தேதி வெளிவரும் என்று எங்களிடம் கூறியிருக்கிறது” என்று கொச்சடையான் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள,கோச்சடையான் தற்போது பிப்ரவரியில் இசை வெளியீட்டை முடிதது, படத்தை ஏப்ரலிலிலாவது வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.

சீயானின் ‘த்ரிஷ்யம்’ மோகம்..!



‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் விக்ரம்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.

படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும், மோகன்லாலின் நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்துள்ள விக்ரம் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.

தற்போது இதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனரும், தயாரிப்பளாருமான சுரேஷ் பாலாஜி கைப்பற்றியுள்ளாராம்.

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?



முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன?

‘மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.


தகுதிகள்:

இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.


குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.


எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும். 


பயனை எப்படிப் பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும்.


இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் / cardiology and cardiothoracic surgery

புற்றுநோய் மருத்துவம் /ˆOncology

சிறுநீரக நோய்கள் /‡Nephrology / urology

மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery

கண் நோய் சிகிச்சை/opthalmology

இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology

ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் /Plastic Surgery

காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T

கருப்பை நோய்கள்/Gynaecology

ரத்த நோய்கள் / Haematology



மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.


இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.


ஆன்லைனில் தெரிந்துகொள்ள:-

உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும். https://docs.google.com/file/d/1VpMQHGnbQywYPlAxYoW8AFec27t6s6sUNMjAIJdGJUtzluRhC2G9KqJl5aMS/edit



மேலும் விவரங்களுக்கு:

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
http://www.cmchistn.com/  இத்தளத்திற்குச் செல்லலாம்.

1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

‘தல’யின் அடுத்த படம் யாருக்கு..?




கௌதம் மேனன் இயக்கத்திற்கு பிறகு ‘தல’ அஜித் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற பேச்சு அலை கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வீரம் படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு தலயின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காற்று வழியாக இரண்டு தகவல்கள் கசிந்துள்ளன.

சூப்பர் ஸ்டாருக்காக தயாரிக்கப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு அஜித்தை அனுகியுள்ளாராம் கேவி.ஆனந்த். மற்றொருபுறம் இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்.

ஆனால் இதற்கெல்லாம் ஒரு முடிவும் இன்னும் வெளியாகவில்லை, புத்தாண்டை கொண்டாட அவுஸ்திரேலியா பறந்த அஜித் திரும்பி வந்த பிறகே இதற்கான பதில்கள் கிடைக்குமாம்.
 
back to top