.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

உகந்த நேரத்தில் உணவின் அவசியம்...

 உகந்த நேரத்தில் உணவின் அவசியம்:-

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்


மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு


இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!




ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!

  பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

உப்பு:

இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்:

செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.
அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி:


வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்:

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி:

அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்:


உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்:

பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ:


இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை:

சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

கண்ணீரும் கதைசொல்லும்.......!




கண்ணீரும் கதைசொல்லும்!

அழுங்கள்! உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம்மால் நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே அறிவியல் உண்மையாகவும் இருக்கிறது. அழுவதால் உடலுக்கு நன்மைகளே அதிகம். மாறாக அழுகையை அடக்கிவைத்தல், உணர்ச்சிகளை அழுகையின் மூலம் வெளிக்காட்டாது மறைத்தல் போன்ற செயல்களால் உடலுக்கு நேரும் தீங்குகள் ஏராளம்.


துன்பங்கள் நேர்கையில் நம் கண்ணீர், கண்களிலிருந்து ஆறாக ஓடாமல் தடுக்கப்படும்போது நம் உடலானது கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது ஏராளமான நச்சு ஹோர்மோன்களைத்(மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பது) தோற்றுவிக்கிறது. இதனால் உடல் நோய்வாய்ப்படுதல், உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.


கண்ணீரின் வகைகள்:


பிரதிபலிப்புக் கண்ணீர்:-

இது கண்களுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால் (உதாரணமாக தூசி, அழுக்கான சிறு துணிக்கைகள்) மற்றும் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுக்கள் அல்லது அமிலங்கள் (வெங்காயம், கண்ணீர்ப் புகை) கண்களில் புகுந்துவிட்டால், தானாகவே சுரந்து கண்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறது.


உணர்வெழுச்சிக் கண்ணீர்:-

இக்கண்ணீரானது மனிதனின் உளவியல் ரீதியான தாக்கங்களின்போது(கவலை, துன்பம்,ஆனந்தம்) வெளிப்படுவது. இது உலகிலுள்ள அத்தனை மனிதருக்கும் பொதுவானது என்று கருதப்படுகிறது.


கழுவும் கண்ணீர்:-

இது பிறப்பிலிருந்து இறப்புவரை எம் கண்களை ஈரத் தன்மையுள்ளதாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு ஒரு திரவம் நம் கண்ணில் சேவை புரிந்துகொண்டிருப்பது, நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உணர வேண்டுமெனில் ஈரமில்லாத, சுத்தமான விரலால் கண்களில் தொட்டுப் பார்த்து(பிசுபிசுப்பை) அறிய முடியும்.

அழுகையில்:

நாம் சிரிக்கும்போது எவ்வளவு சக்தியைச் செலவு செய்கிறோமோ(நிமிடத்திற்கு 1,3 கலோரிகள்) அதேயளவு சக்தியை, அழும்போதும் செலவு செய்கிறோம். அழுவதை விட சிரிப்பது உடலுக்குச் சிறந்தது என்று யார் சொன்னது?

கண்களில் 'பீளை' உருவாகுதல், அழுததால் கண்கள் வீங்குதல், கண்கள் சிவத்தல் எல்லாமே கண்கள் தம்மைக் காத்துக்கொள்ள, தாமாகவே(automatic) எடுக்கும் முயற்சியாகும்.
அழுகை மட்டும் இல்லாது போயிருந்தால், தன் கைக்குழந்தைக்குப் பசி எடுப்பதைத் தாயால் எப்படி உணர முடியும்?


நாம் துன்ப, துயரமான சூழ்நிலைகளில் அழாமல் அடக்கி வைக்கும்போது எங்கள் உடலானது, கூடிய விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது, நாம் கவலையடையும்போது எமது உடலானது அதிக அளவில் அழுத்த, நச்சுக் ஹோர்மோன்களை உற்பத்தி செய்கிறது, நாம் அழும்போது இக் ஹோர்மோன்கள் உடலிலிருந்து கண்ணீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றது. இவ்வாறு அழாமல் தேக்கி வைக்கும் ஹோர்மோன்கள் உடலுக்கு ஆபத்தானவையாகும். இவை மன அழுத்தம், பலவித வாத, நரம்பு நோய்கள், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

சிம்புவை அலைய விடும் ஹன்சிகா..!






காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். அதோடு, அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும், பின்னாடியே தானும் பறந்து விடுவார்.

அப்படிப்பட்ட சிம்பு இப்போது இரண்டாம் கட்டமாக ஹன்சிகா மீது காதல் தொடுத்திருக்கிறார். இந்தமுறையும் அவரது காதல் ரொம்ப உறுதியாக இருக்கிறது. அதனால் முதல் காதலுக்கு எந்த குறைவும் இல்லாமல் இந்த முறையும் ஹன்சிகாவை ஒரு நாளைக்கு ஒரு தடவை பார்க்கா விட்டாலும் துடித்துப்போகிறாராம்.

ஆனால், அவரது காதலின் வேகத்தை தெரிந்து கொள்ளாத ஹன்சிகாவோ, அடிக்கடி அவருக்கு டேக்கா கொடுத்து வருகிறாராம். உள்ளூரில் படப்படிப்பில் இருக்கும்போதும் அவர் ஸ்பாட்டுக்கு வந்து தொந்தரவு செய்வார் என்று போனையே சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். அதேபோல் அவுட்டோர் செல்லும்போது சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப்பாகி விடுகிறாராம்.

இதனால், காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்று மனதுக்கு தோன்றி விட்டால், மேற்படி பட நிறுவனத்தை அணுகி விசாரித்துக்கொண்டு அவுட்டோருக்கு சென்று அம்மணியை ஆசைதீர பார்த்து ரசிக்கிறாராம் சிம்பு. இப்படி வந்த இடத்தைகூட தனக்கு சொல்லாமல் டீலில் விடுகிறாரே ஹன்சிகா என்ற கோபம் கொஞ்சம்கூட அவருக்கு வரவில்லையாம்.
 
back to top