.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 4, 2014

உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.!



இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்.

தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே

பதில் வரும். இவை தவிர, தொழில்முறை உறவுகளும் உள்ளன. ஆனால், இந்த உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும் மட்டுமே செயல்பட்டு வருவதே உண்மை.

முன்பெல்லாம் உறவுகளில் ஏதேனும் நல்ல காரியங்கள் நடந்தாலும், துக்க காரியங்கள் நடந்தாலும் வண்டி கட்டிக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் சென்ற காலம் உண்டு. ஆனால், இப்போது ஒருவர் காலமாகிவிட்ட தகவல் கிடைத்தால் “ஆர்ஐபி’ (ரெஸ்ட் இன் பீஸ்) என்று குறுந்தகவல் அனுப்புவதைப் பார்க்கிறோம். பிறந்த நாள் விழா குறித்த தகவல் கிடைத்தால் பலர் தேடிப்பிடித்து “பொம்மை’, “பூங்கொத்து’ படங்களை குறுந்தகவல் செய்தியில் இணைத்து வாழ்த்து அனுப்பிவிட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இது தொழில்நுட்ப புரட்சியின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

உறவினர்கள், நண்பர்கள் பேசிக் கொள்வதும் சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. உறவுகளும், நட்புகளும் இன்பம் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வது அரிதாகி வருகிறது. இதனால், உறவு, நட்பு வலுவிழந்து விடுகிறது. இது நாளடைவில் தொலைந்தும்விடும்.

தனி மரம் தோப்பாக முடியாது. மனிதனுக்கு உறவுகள் மிகவும் அவசியம். உற்றார், உறவினர்கள் இல்லாமல் வாழ்வு இல்லையே. அப்படிப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் உண்மையானவர்களாக இருந்தால்தானே மனிதனின் வாழ்வு செழுமை பெறும்.

உறவில் வாழும் போது நல்ல முன்மாதிரியாக இருப்பது மிகவும் அவசியம். நல்லதொரு முன்மாதிரியைக் கொண்டிருக்காததால்தானே இன்றைய இளைஞர்கள் விளையாட்டு, சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்கள், நாயகிகளை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகிறார்கள்.

மேலும், உடன் வாழ்வோர்களின் உறவும் சரிவர இல்லாமல் போவதாலும், நல்ல முன்மாதிரிகள் கிடைக்காமல் இளைஞர்கள் திசை மாறிச் செல்ல நேரிடுகிறது. இதனால், ஒட்டு மொத்த சமுதாயமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இன்பத்தை அனுபவிக்க எத்தனை, எத்தனையோ உறவுகள் கூடும். ஆனால், துன்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உறவும் முன்வருவதில்லையே…! அண்ணன், தம்பி உறவுக்கு இலக்கணம் வடித்ததும், துன்பமான நேரத்தில் கை கொடுத்து உதவிய பக்தரை தம்பியாக்கியதும்தான் ராமாயணம் சொல்லும் பாடம். மாமனின் உறவுக்கு கோடிட்ட மகாபாரத்தின் கண்ணன் சொன்ன போதனையான “கீதை’ மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தேசம் மீது பாசம் கொண்ட காந்தியை “தேசத் தந்தை’ என்றுதானே அழைக்கிறோம். நேசம் கொண்ட மாமனிதரை “நேரு மாமா’, அறிவுரை வழங்கிய முதாட்டியை “ஒüவை பாட்டி’ என்கிறோம். அன்புக்கு இலக்கணம் கொடுத்த மாதரசியை “அன்னை தெரசா’ என்றுதானே உலகம் அழைக்கிறது. அருளைப் போதித்துவரும் போதகர்களை “அப்பா’, “சகோதரன்’ என்றே சொல்கிறோம். பணிவிடை செய்யும் பெண்ணை “சகோதரி’ என்கிறோம். இவ்வாறுதான் கற்காலத்திலும், அண்மைக் காலங்களிலும் உறவுகள் விரிந்தன. மனித வாழ்வு சிறக்க, நாடு செழுமை பெற உறவுகள் அவசியமாகிறது.

எனவே, உரசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கோபத்தைக் குறைத்து, நாக்கை அடக்கி, பகைமை பாராட்டாமல், இனிதான வாழ்கைக்கு உத்தரவாதம் தருவதாக ஒவ்வொருவரும் சபதமேற்போம். உறவுகளின் இணைப்பை, தொடர்பை விரிவுபடுத்துவோம்.

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி....




கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி
கலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம்
வாயுத் தொல்லைக்கு பெருங்காயம்


பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.

பெருங்காயத்திலுள்ள “ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.

பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது




ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது:-

வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சொந்த ஊரில் சதம் அடித்தார்,மேலும் பிராட் ஹாடின் பேட்டிங்கில் இங்கிலாந்து தள்ளாடுகிறது.

கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் போர்த்விக், ரேங்கின், பிளான்ஸ் ஆகிய 3 பேர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் கூக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர் 16 ரன்னிலும், ரோஜர்ஸ் 11 ரன்னிலும் போல்டு ஆகி வெளியேறினர். கேப்டன் கிளார்க் 10 ரன்னில் அவுட் ஆனார். வாட்சன் 43 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஜார்ஜ் பெய்லி (1 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 97 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் பிராட் ஹாடின்– ஸ்டீவன் ஸ்மித் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்த்தனர். ஹாடின் 75 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜான்சன் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

சிறப்பான ஆடிய ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார். இது அவருக்கு 3–வது சதம் ஆகும். ஆஸ்திரேலியா அணி 72 ஓவரில் 300 ரன்னை கடந்தது. அப்போது அந்த அணி 7 விக்கெட்டை இழந்து இருந்தது. சதம் அடித்த சுமித் 115 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்னில் சுருண்டது.

ஆஷஸ் வரலாற்றில் மூன்றாவது முறையாக 5-0 வென்று இங்கிலாந்தை துரத்துகிறது ஆஸ்திரேலியா, ஐந்தாவது தொடர்ச்சியான டெஸ்ட் அணியை மாற்றாமல் உள்ளது ஆஸ்திரேலியா .ஆல் ரவுண்டர் வாட்சன் (இடுப்பு) பின்னர் மற்றும் இஷாந்த் ரியான் ஹாரிஸ் (முழங்கால்) விளையாட அனுமதிக்கப்படவில்லை.

ஜில்லா - வீரம் ஆன்லைன் புக்கிங் துவங்கியது




இளைய தளபதி விஜயின் ஜில்லா மற்றும் தல அஜித்தின் ஆரம்பம் திரைப்படங்கள் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கின்றன. இதனையொட்டி இப்படங்களின் ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது.

இளைய தளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில், நேசன் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி
தயாரிப்பில் உருவாகியிருக்கிறது ஜில்லா திரைப்படம்.

தல அஜித், தமன்னா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது வீரம் திரைப்படம்.

ஜில்லா, வீரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் U சான்றிதழ் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்
ஆகியோர் நடிப்பில் வெளிவருகின்ற படங்களென்பதால் இப்படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு வானளாவி நிற்கிறது. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்
ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் இப்படங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்குமே பெருமளவில் ரசிகர்கள் இருப்பதால் இந்த ஆண்டுப் பொங்கல் அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி
பொதுமக்களுக்கும் பெரும் பொழுதுபோக்காக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

 
back to top