.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

உண்மை தேடுவோர் வாழ்வில் ஓய்தல் என்பது இல்லையே...?



உண்மை



உண்மை தங்க ஒரு வீடின்றி ஒரு இதயத்தை தேடி அலைகிறது

உண்மை அதிட்டம் என்பது புனிதங்களின் புனிதத்திலிருந்தே துவங்குகிறது

உண்மை அன்பு ஒரு போதும் சந்தேகப்படாது பழிவாங்காது

உண்மை அன்பு துயரப்படுமே தவிர துரோகத்துக்கு பழி வாங்காது

உண்மை அனைத்தும் பேசப்பட்டு இருக்க வேண்டியதில்லை

உண்மை உண்மையானது என்ன சொன்னோம் என்பதை மற்ந்துவிடும்

உண்மை உணர வேண்டும் உள்ளம் தெளிய வேண்டும்

உண்மை உணர்ந்ததும் உற்சாகமாய் இருப்பவன் ஞானி

உண்மை உணர்ந்து வருந்துபவன் உத்தம வெற்றியடைவான்

உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை

உண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை

உண்மை என்பது ஒளி போலக் கூசும்

உண்மை என்பது திரையிடப்பட்டுள்ளது சத்யத்தை நேசிப்பவரே காண முடியும்

உண்மை என்பது வினோதமானது கற்பனைக் கதையை விட

உண்மை என்பதும் ஒரு அழகே,அழகென்பதும் ஒரு உண்மை

உண்மை என்ற தத்துவம் உலகை விட்டு மறைந்து வருகிறது

உண்மை ஒரு அடி நடப்பதற்குள் பொய் உலகை ஒரு சுற்று சுற்றி விடும்

உண்மை ஒரு போதும் அனாதையில்லை ஊர் கூடி தேரிழக்கும்

உண்மை ஒருநாள் ஒளிரும்

உண்மை ஓரடி வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றிவருகிறது

உண்மை தெரிந்தும் ஊமையாய் இருப்பவன் கோழை

உண்மை தெரியும் உலகம் புரியும் படிப்பாலே

உண்மை தேடுவோர் வாழ்வில் ஓய்தல் என்பது இல்லையே

உண்மை நடந்து போய் சேர்வதற்குள் கயமை பறந்து சென்று கடைவிரிக்கிறது

உண்மை பயின்று கயவனாய் ஆசையிலிருந்து விடுபடுவதே பேரின்பம் ‍

உண்மை பயின்று தூயவனாய் ஆசையிலிருந்து விடுபடுவதே பேரின்பம்

உண்மை பரிசோதிகப்படலாம்

உண்மை புறப்பட்டு வாசல் வருவதற்குள் கயமை வானத்தை சென்று விடும்

உண்மை பேசியதால் உருவான எதிரிகள் அதிகம்

உண்மை போல பொய் பேசுவதே அரசியல் விவேகம்

உண்மை மட்டுமே தெய்வம் என்றால் நாத்திகரும் மறுப்பதில்லை

உண்மை மருந்தை விடக்கும் ஆனால் நோய்தீர்க்கும்

உண்மை முதலில் கேலி செய்யப்படுகிறது/ எதிர்க்கப்படுகிறது இறுதியில் ஏற்கப்படுகிறது

உண்மை, நேர்மை , தூய்மை,நீதி, அன்பு மற்றும் நன்மை என பல உருவங்கள் வாய்மைக்கு

உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது

உண்மைக்கு தொண்டு செய்யும் உத்தமாக்கு என்னும் சாவு இல்லை

உண்மைக்கு பயப்படுப‌வன் வேறு யாருக்கும் பயப்பட மாட்டான்

உண்மைக்குத் தக்க ஊக்கம் இல்லாவிட்டால் உலகெல்லாம் கயமை

உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது

உண்மைகள் புறக்கணிக்கப்பட்டாலும் ஒரு போது மங்குவதில்லை

உண்மைகளை சொல்ல கோள் பார்த்து மயங்காதே

உண்மைப் பொருளும் உலோகாயுதன் உணர்வே

உண்மையாக காதலிப்பதைத் தவிர‌

உண்மையாக துணிச்சலாக உயர்ந்த லட்சியத்துக்காக பாடுபடவேண்டும்

உண்மையாய் உழைத்த ஊழியருக்கு உதவாதது நயவஞ்சகம்

உண்மையான மாற்று கருத்து நமது சிந்தனைக்கு வேலை தரும்

உண்மையான அன்பும் சந்தேகமும் ஒரு இடத்தில் வாழ முடியாது

உண்மையான சிறப்பான திறமை என்பது செயல்படும் போது ஆனந்தமடைகிறது

உண்மையான நல்ல மனிதன் எவர் ஒருவரையும் வெறுக்க மாட்டான்

உண்மையான நல்ல மனிதன் யார் ஒருவரையும் துவேசம் செய்வதில்லை

உண்மையான படைப்பாளிகளை காலம் என்றும் தலை வணங்கும்

உண்மையான மதீப்பீடுகளை சரியாககணிப்பதே தத்துவத்தின் கடமை

உண்மையான மன மாற்றம் கற்பனையில் துவங்குகிறது

உண்மையான முழுமனமாற்றமும் முழுபுரட்சியுமே இன்றைய தேவை

உண்மையானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது

உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அக‌ல பாதாளம் தான்

உண்மையிலே உணர்வினிலே உயர் நோக்கத்திலே உய்ர்வோம் நாம்

உண்மையின் ஆழத்திலிருந்து சொல் வர வேண்டும்

உண்மையின் உருவம் மிகவும் எளிமை நிறைந்தது

உண்மையும் உயிர்த்தூய்மையுமே ஒழுக்கத்தின் உயிர்நாடி

உண்மையும் நன்மையும் நம்பப்படுவதில்லை மோரை விட கள்விரும்பப்படுகிறது

உண்மையென்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு

உண்மையே பொய் போலவும் பொய் உண்மை போலவும் விளங்குவதுமாளல

உண்மையே வெல்லும் பாதகம் படு தோல்வி அடையும்‍‍

உண்மையை அறியாதீர் அது உங்களை பித்தராக்கும்

உண்மையை உண்மைக்காக பற்றிக் கொள்வதே நற்பண்புகளின் வித்து

உண்மையை துணிச்சலாக பேச முடியாதவனால் உறங்க முடியாது

உண்மையை நேசியுங்கள் தவறுகளை மன்னியுங்கள்

உண்மையை முட்டாள் கூட பொய் சொல்ல முடியும் பொய் சொல்ல புத்தி வேண்டும்

உண்மையை விட இன்பமானது உலகில் வேறு எதுவுமில்லை

உண்மையை வெல்லும் பாதகம் படுதோல்வியடையும்

உண்மையைக் காண்பதற்கு மிகக் கொடிய எதிரி வாதமே

உண்மையைச் சிலரே விரும்புவர்

உண்மையைச் சொல்பவன் பின் ஒரு கூட்டமே வரும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தார் உத்தம தலைவர்கள்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

உண்மையைத் தழுவு நன்மையை நாடு

உண்மையைத் தைர்யமாக பேச முடியாதவன் உறங்க முடியாது

உண்மையைப் போற்றுதலே உயர்ந்த பக்தியாகும்.

மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல்



மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல்

மதுவில் இருந்து முற்றிலும் விலகியிருக்கும் மக்களை விட மதுபானத்தை வழக்கமாக அருந்தும் மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், மது அருந்தாத மக்களின் இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருப்பவர்களாக தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் மூன்று பானங்கள் என வரையறுக்கப்பட்ட மிதமான குடிபழக்கம் உள்ள மக்கள் மிகக்குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டிருப்பார்கள் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியலாளர், சார்லஸ் ஹோலஹன், தலைமையிலான அணி ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்று 'தி இன்டிபென்டன்ட்' தகவல் அளித்துள்ளது.

ஆய்வில் மது அருந்துபவர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக அனைத்து சமயத்தின் இறப்புக்கும் இடையே தொடர்பு ஆய்வு ஒன்று அமைக்கப்பட்டது. ஆய்வில், மிதமான மது அருந்தும் மக்களுடன் ஒப்பிடும்போது மதுவில் இருந்து விலகியவர்களுக்கு 2 மடங்கு இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்றும், அதிகமாக மது அருந்துபவர்களின் இறப்பு ஆபத்து 70% அதிகரித்துள்ளது, மற்றும் லேசாக மது அருந்துபவர்களுக்கு 23% இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டது.

குடிப்பழக்கத்தில் இருந்து விலகியவர்கள் மற்றும் அதிக குடிப்பழக்கம் கொண்ட மக்கள் தங்களை மாற்றிக் கொண்ட பின், மிதமான மது அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் இறப்பு அபாயங்கள் 51% மற்றும் 45% அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உறவை பரிசோதிக்காலாகாது...?




உணவால் அல்ல ஊக்கத்தால் ஊட்டம் பெருகிறது குழந்தை

உணவிலும் வார்த்தையிலும் செலவிலும் சிக்கனமாக இரு

உணவின்றி கூட ஒருவன் இருப்பான் ஓசையின்றி இருக்கமாட்டான்

உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கு அன்பு செய்தலே

உணவு இலையிலிருந்தால் விருப்பு தரையிலிருந்தால் அறுவெறுப்பு

உணவு உடை உத்தமம் சத்யம் என்பது அதற்கு சரியான வழிகள்

உணவு உண்ணாமல் யாராலும் சிந்திக்க முடியாது

உணவு உறவு உறக்கத்துக்கு அடிமையாகதவன் செயலே வெற்றி பெறும்

உணவு உறவு உறக்கம் தள்ளிப் போட்ட இளைஞன் அறிஞன் ஆனான்

உணவு ஒய்வு அமைதி ஆனந்தம் இவையே சிறந்த மருந்துகள்

உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது

உணவு வேக காத்திராதவர் வேகாத சோறை உண்ணுகிறார்

உணவு,உடை,உறை கொடுத்தாலும் இனிய சொல்லுக்கு ஈடாகாதே

உணவை குறைத்து உழைப்பை அதிகரித்தால் நோய் வராது

உணவை சுவையாக்கும் உன்னத பொருள் பசியின்றி வேறில்லை

உணவைப் பார்த்தால் உறவைக் கூப்பிடும் கண்ணியவான்கள் காகங்கள்

எகிறும் பெட்ரோல், டீசல் விலை மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா?



ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருபுறம் எதிர்க்கட்சிகள், பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கடமையாக கொண்டுள்ளனர்.

ஆனால் இதற்கான மாற்று திட்டங்களில் பலர் கவனம் செலுத்துவதில்லை என்பது தான் உண்மை. மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை நீக்கினால் ஓரளவு குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்க முடியும். ஆனால் வரியை குறைப்பதோ அல்லது நீக்குவதோ சாத்தியமில்லாதது. கோவாவில் மட்டும் விற்பனை வரி குறைக்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது. இதற்கு மாற்று தீர்வு எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டும் தான். இந்தாண்டின் துவக்கத்தில் சர்க்கரை ஆலைகளில் 5 சதவீதம் மட்டும் எத்தனால் எரிபொருள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

இதை மேலும் ஊக்குவிக்கவேண்டும். எத்தனாலை தவிர வேறு எதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்காது. எத்தனால் தயாராவது எப்படி: கரும்பு சாறுடன் சாக்ரோமைசிஸ் செர்வேசியே என்ற ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இந்த நுண்ணுயிரி தான் எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மொலாசஸிஸ் இருந்து 97 சதவீதம் தூய எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் பயன்பாடு மூலம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 

பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம். அதிகபட்சம் ரூ.30க்கு ஒரு லிட்டர் எத்தனாலை வாங்க முடியும். இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார் இஞ்சின்களில் 25 சதவீதம் எத்தனாலை பயன்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகிறது. இந்தியாவில் சாத்தியமா?: இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் விருதகிரி கூறியதாவது: இந்தியாவில் கரும்பு உற்பத்தி அதிகம். தமிழகத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது.

சர்க்கரை ஆலைகளில் 20 ஆயிரம்  விவசாயிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு மொத்தம் 9 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அங்கு தயாரிக்கப்படும் எத்தனாலை தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான எரிசாராயமாக தயாரித்து தரக் கூறி ஆலைகளை அரசு நிர்பந்திக்கிறது. மாற்று எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்த அரசுக்கு விருப்பம் இல்லை. 313 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக எத்தனால் தயாரிக்கலாம்.

ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம். தற்போது 5 சதவீத எத்தனாலுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதாக கூறி உள்ளது. அனுமதி கொடுப்பதன் மூலம் எத்தனாலில் எந்த தீங்கான விஷயங்களும் இல்லை என்பது புலனாகிறது. லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் நிலையை உணர்ந்து பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக முழுவதுமாக எத்தனாலை மாற்று எரிபொருளாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை கரும்புக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில் மத்திய மாநில அரசுகளிடையே வேறுபாடு உள்ளது. சில மாநிலங்களில் அரசு நடத்தி வரும் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலைகள் தொய்வின்றி இயங்குவதற்கும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பது சாதகமாக அமையும்.

அமெரிக்கா, பிரேசில் முன்னிலை


அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள், சுற்றுசூழலையும், உயர்ந்து வரும் பெட்ரோல் விலையையும் கருத்தில் கொண்டு அதிக அளவில் எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளும் எத்தனால் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. அமெரிக்காவில் சோளம் அதிகமாக விளைவதால் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேசிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எத்தனால் உபயோகத்தில் உள்ளது. தற்போது பிரேசிலில் 85 சதவீதம் எத்தனால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கனடா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன.
 
back to top