.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

தடைகளே ஓடி வா!








தடைகளே ஓடி வா!

1.எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?.வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது,நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர்பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது.தடைகளை கண்டு அணைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம்.அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?


2.தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமானதல்ல,தடைகள் தான் வாழ்க்கை,அந்த தடைகளை நாம் எதி நோக்கவில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்றுதான் பொருள்.நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த காலகட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று அதனை எதிர் நோக்கியிருந்தோமோ, அந்த கால கட்டங்கள் மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் .


3.நாம் இன்பமான காலங்கள் என்று நினைத்த கால கட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் மறந்து போகும் .வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பது நம் அணைவருக்கும் தெரியும் .அந்த அனுபவங்களில் எஞ்சி இருப்பது நாம் போராடிய காலங்கள் தான்.சரி இந்த அனுபங்களை எப்படி பெறுவது?தடைகளை எப்படி எதிர் நோக்குவது.


4.நாம் தடைகள் என்று எதை நினைக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி புதையல் இருக்கின்றது என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும் ,ஏன் என்றால் இது தான் உறுதியான பிரபஞ்சவிதி.தடைகள் ஒரு விசயத்தில் இருக்கின்றது என்றால் ,தடைகளுக்கு அப்பால் உள்ள வெற்றி புதயலை அடைய நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முதல் பாடம்.சரி தகுதி என்றால் என்ன ?தடைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வது தான் முதல் தகுதி,நாம் தடைகளை கண்டு அஞ்சுவதோ,அதனிடம் இருந்து ஓடி விடுவதோ கூடாது.


5.தைரியமாக தடைகளை அது எப்படி இருந்தாலும் ,நம்மிடம் அதனை எதிர் கொள்ளும் தகுதி இல்லாவிட்டாலும் கூட நாம் எதி கொள்ள கொள்ள அந்த தடைகள் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் அந்த ரகசிய வழிகளை நமக்கு உணர்த்தியேதீரும் .எந்த விசயத்திலும் தோல்வியடைந்தவர்கள் தடைகள் உணர்த்தும் பாடங்களை அறியும் முன்பே அதனை விட்டு வெளியேறி விட்டவர்கள்தான்.


6.ஒருவர் நினைக்கிறார் எனக்கு என் வாழ்வில் எந்த தடைகளும் இல்லை என்றால் ,இது தவறு உடனே நீங்கள் உங்களால் முடிந்த வரை நீங்களாகவே சவாலான சூழ்நிலைகள் என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள் ,அவைகளை எதிர் கொள்ளுங்கள் வாழ்க்கையை வாழுங்கள் ,இல்லையென்றால் உங்களுக்கு நினைத்துப் பார்க்க கடைசி காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் வாழ்க்கை என்று ஒன்று இருக்காது.

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்



அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?





பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே!


அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே!


என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்


.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான்,


ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது.


அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும்.


ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை.


சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது.


காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது.


மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது.


ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது

தமிழ் எண்களில் ரூபாய் நோட்டு..!




உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

 (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் .

 எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
 
back to top