.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

‘ஒன்பதுல குரு’ இயக்குனருடன் விஜய்..?




‘ஒன்பதுல குரு’ இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

ஜில்லா படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்,

அதனைத் தொடர்ந்து பி.டி செல்வக்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நடிகர் விஜயின் பிஆர்ஓவாக இருந்தவர். ஒன்பதில் குரு படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் அடுத்து தயாரிப்பாளராவும் அவதாரம் எடுக்கிறார்.

எனினும், படத்திற்கான தலைப்பு, நடிகர்கள் மற்றும் மற்ற விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்தை பி.டி.செல்வகுமாருடன் சேர்ந்து தமீன் என்பவரும் தயாரிக்கிறார்.

கராத்தே கற்கிறார் நயன்...



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான விளங்கும் நயன்தாரா கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், பின்னர் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக சந்திரமுகியில் நடித்தார்.

தனது குடும்பப் பாங்கான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நயன்தாரா, பின்னர் தனுஷின் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்த அவருக்கு அது பெரிய வெற்றியை தந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஆக்சனுக்கு மாறியுள்ளார்.

அண்மையில் வெளியான, 'ராஜாராணி', 'ஆரம்பம்' திரைப்படங்களில், அசத்தலாக நடித்த அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, 'கஹானி' திரைப்படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் நடிக்கவிருக்கிறார்.

'அனாமிகா' முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்பதால் முதன் முறையாக, ஆக்சன் நாயகியாக அவதரித்துள்ளார் நயன்தாரா. 'அனாமிகா'வை தொடர்ந்து, 'ஜெயம்' ரவியுடன் ஜோடி சேரவுள்ளார், அந்த திரைப்படத்திலும் ஆக்சன் ரோல் தானாம்.

அதாவது, கராத்தே மாஸ்டராக நடிக்கும் நயனுக்கு, ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம். இதற்காக, சில மாதங்களாக கராத்தே பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறாராம் நயன்தாரா.

மேலும் வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வாங்கியுள்ளாராம்.

மாதுளம்பூவின் பயன்கள்



மாதுளம்பூவின் பயன்கள்:-

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

பாஸ்வேர்டு குறித்த சில விளக்கங்கள்….!



இன்று வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள்.

மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம். தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.

இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம். பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.
 
back to top