.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?



உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்........

பெண்கள் சேமிக்க உதவும் முதலீடுகள்..?



தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.


1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.


2. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.


3.நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.


4.பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.


5. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.


6. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.


மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்

குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!




குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!


வீட்டில் நாயை செல்லப் பிராணியாக வளர்க்கும் போது, அனைத்து நாய்களும் செய்யும் ஒரு எரிச்சலூட்டும் விஷயம் தான் குரைப்பது. நாயும் மனிதரைப் போல் தான். ஒரு கட்டத்தில் அதற்கும் அழுப்பு தட்டிவிடும். அப்போது அது தனக்கு போர் அடிக்கிறது என்பதை குரைப்பதன் மூலம் வெளிப்படுத்தும்.


அதுமட்டுமின்றி வெறும் போர் அடிக்கும் போது மட்டும் நாய் குரைப்பதில்லை. சந்தோஷமாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும், ஆபத்தின் போதும் கூட நாய் குரைக்கும். ஆனால் சில சமயங்களில் நாயானது மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் எப்போதும் குரைத்துக் கொண்டே இருந்தால், அப்போது அதனை அடக்குவது என்பது சற்று கடினமான விஷயமே. அதற்காக குரைப்பதை நிறுத்த வேண்டுமென்று, அதனை அடித்தால் மட்டும் சரியாகிவிடாது. அதனை புரிந்து கொள்ள வேண்டும்.


ஏனெனில் நாய் எப்போதும் தேவையில்லாமல் தொடர்ச்சியாக குரைக்காது. சரி, இப்போது குரைக்கும் நாயை எப்படி சாந்தப்படுத்துவது என்று பார்ப்போம். அதிலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குரைத்துக் கொண்டே இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் சொன்னால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.


* நீங்கள் வீட்டில் இல்லாத போது நாய் குரைக்காமல் இருக்க வேண்டுமானால், அதற்கு ரப்பர் பொம்மையைக் கொடுத்து சென்றால், அது அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும். இதனால் நீண்ட நேரம் குரைக்காமல் இருக்கும்.


* அக்கம் பக்கத்தினர் வந்து சண்டை போடும் வகையில் உங்கள் நாய் குரைத்தால், அதனுடன் பேசுங்கள். பேசினால் நாய்களுக்கு புரியாது என்று நினைக்க வேண்டாம். அது மனிதரைப் போலவே நன்கு புரிந்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே அதற்கு புரியுமாறு சொல்லுங்கள்.


* நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால், வீட்டினுள் நாயை கட்டிப் போட்டிக்கும் போது, வீட்டில் ரேடியோவை போட்டு விட்டு செல்லுங்கள். இதனால் அது வீட்டில் ஒருவர் இருப்பது போன்று உணர்ந்து, தனிமையை தவிர்த்து, குரைப்பதை நிறுத்தும்.


* நீங்கள் அனைத்தும் செய்தும், ஏன் நீங்கள் அதனுடன் இருக்கும் போதே தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தால், அதற்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆகவே அப்போது அதனை நன்கு கவனித்து, முடிந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துப் பாருங்கள்.


* எதுவும் முடியாவிட்டால், நாயை பார்த்துக் கொள்ள ஒருவரை விட்டு செல்லுங்கள் அல்லது அதனை நன்கு பழகும் பக்கத்து வீட்டில் விட்டு செல்லுங்கள். இதனால் அது தனிமையை தவிர்த்து, குரைக்காமல் இருக்கும்.

கணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்....?




கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?


1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்
   
   
 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
   
   
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.
   
   
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
   

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?



பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
   
   
உங்கள் பங்கு என்ன?



உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
 
back to top