.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 6, 2014

விஜய் அஜித்துடன் மோதும் சத்யராஜ்..!



நக்கல் மன்னன் சத்யராஜ் நடித்துள்ள கலவரம் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சத்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் கலவரம் திரைப்படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வம் இயக்கியுள்ளார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இக்கதை இருக்குமென்றும் கூறப்படுகிறது. யுனிவர்சல் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் முறையே ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள்
வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஏற்கெனவே இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சத்யராஜின் கலவரம் திரைப்படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14ல் வெளியாகுமா அல்லது ஜனவரி 10 லேயே வெளியாகுமா என்பது சரியாகத் தெரியவில்லை.

விஜயுடன் - தனுஷ் .....!




இளைய தளபதி விஜயுடன் தான் பாட்டுப்பாடி, நடனமாடி மகிழ்ந்ததாக தனுஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சமூக ஊடகமான ட்விட்டரில் தனுஷ் பெரும்பாலும் ஏக்டிவாக இருக்கிறார். அவரது அப்டேட்டுகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள டிவிட்டர் அவருக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. சமீபமாக தனுஷின் டிவிட்டர் ஐடி வெரிஃபை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இளையதளபதி விஜயுடன் அவர் ஆடிப்பாடி மகிழ்ந்ததாக விஜயுடன் தான் இருக்கும் புகைப்படத்தைத் டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். nஉடனே விஜய் ரசிகர்கள் இளையதளபதியைத் தங்களுக்கு ஒரு ஹாய் சொல்லச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். உடனே விஜய் தனது ரசிகர்களுக்கு ஹாய் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். இதுகுறித்து தனுஷ் மற்றும் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

விஜயின் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷ் தற்பொழுது தனது இருபத்தைந்தாவது படமான வேலையில்லாப் பட்டதாரி படத்திலும், கே.வி.ஆனந்த இயக்கும் அனேகன் படத்திலும் நடித்துவருகிறார்.

எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்கள் : உளறிய ஐீவா!! -




தனது பிறந்த நாள் விழாவின் போது இரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா தவறுதலாக எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்க என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.

நடிகர் ஜீவாவுக்கு நேற்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில்..

இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும் அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும்.

சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதனால் படங்கள் ஓடணும். அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை தியேட்டரில் போய் பார்க்கணும். எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில பாருங்க, என்றார் வாய் தவறி.

உடனே வந்திருந்தவர்கள் சத்தமாக சிரித்து வைக்க, சாரி விஜய் – அஜித் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது. டெலிட் பண்ணிடுங்க, என்றார்.
மீண்டும் மறக்காம திருட்டு வீசிடில படம் பார்க்காதீங்க என்பதற்கு பதில், பாருங்க என்றே தவறுதலாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறைதான் திருட்டு வீசிடில பார்க்காதீங்க என்றார்.

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!





சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார்.

இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார்.

தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந்திப்படத்துக்கும் இசையமைக்கப்போவதாக நிருபர்களிடம் இளையராஜா தெரிவித்தார்.
 
back to top