.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 6, 2014

எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்கள் : உளறிய ஐீவா!! -




தனது பிறந்த நாள் விழாவின் போது இரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா தவறுதலாக எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்க என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.

நடிகர் ஜீவாவுக்கு நேற்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில்..

இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும் அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும்.

சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதனால் படங்கள் ஓடணும். அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை தியேட்டரில் போய் பார்க்கணும். எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில பாருங்க, என்றார் வாய் தவறி.

உடனே வந்திருந்தவர்கள் சத்தமாக சிரித்து வைக்க, சாரி விஜய் – அஜித் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது. டெலிட் பண்ணிடுங்க, என்றார்.
மீண்டும் மறக்காம திருட்டு வீசிடில படம் பார்க்காதீங்க என்பதற்கு பதில், பாருங்க என்றே தவறுதலாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறைதான் திருட்டு வீசிடில பார்க்காதீங்க என்றார்.

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!





சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார்.

இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார்.

தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந்திப்படத்துக்கும் இசையமைக்கப்போவதாக நிருபர்களிடம் இளையராஜா தெரிவித்தார்.

கஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா



இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து இப்படத்துக்கு தேர்வு செய்தார்களாம். சேகர்முல்லா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இதில் நயன்தாராவும், கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்தனர். புதிதாக திருமணமான பெண் காணாமல் போன தனது கணவனை தேடி அலைவது போன்று கதையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து டைரக்டர் சேகர்முல்லா கூறும்போது, கஹானி இந்திப் படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு விட்டதால் அந்த படத்தை அப்படியே படமாக்கினால் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது. எனவேதான் கதையில் மாற்றங்கள் செய்துள்ளேன். அனாமிகா படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றார்.

அனாமிகா படத்தில் பசுபதி, வைபவ் போன்றோரும் நடித்துள்ளனர். விரைவில் ரிலீசாக உள்ளது.

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!


நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்

 
back to top