.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 7, 2014

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!



தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்!!!


நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்

‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்..!



கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னது:

“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.

நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று.

நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடாதா?’ என்று நப்பாசை. ஆனால், அப்படியும் நாற்றம் போகவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரை நான் சந்திக்க நேரிட்டது.

மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர் ஆயிற்றே, அவரிடம் என் குறையைக் கூறினால், அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன்.

எனக்கு இருக்கும் வாய் துர்நாற்றம் பற்றி அவரிடம் கூறினேன். தாமதிக்காமல் சொன்னார்: ‘தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போவதை நீங்களே உணர்வீர்கள்’என்றார்.

அவர் கூறியதில், அப்போது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும், போகாத துர்நாற்றம், நல்லெண்ணெய்யால் எப்படி போகப் போகிறது என்று கிண்டலாக நினைத்தேன்.

இருந்தாலும், அதையும் செய்துதான் பார்த்து விடுவோமே என்று, மறுநாளில் இருந்தே, ‘ஆயில் புல்லிங்’செய்யத் தொடங்கினேன். பத்து நாட்களில் படிப்படியாக என்னுடைய வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நானே உணர்ந்தேன்.

பதினைந்து நாட்கள் கடந்தபிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! ‘நல்லெண்ணெய்க்கு இப்படியொரு மகத்தான மருத்துவ குணமா..?’

இப்போது நண்பர்கள் என்னுடன் அமர்ந்து, சிரித்த முகத்துடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.

‘வாயில் இருந்த துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று எல்லோரும் கேட்டார்கள்.

நான், ‘ஆயில் புல்லிங்’பற்றி சொன்னேன். அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தார்கள்.

‘நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், இப்போது முழுமையாக நம்புகிறேன். பலனை உண்மையாகக் கண்டபிறகுதான் நல்லெண்ணெய்யின் சிறப்பே எனக்குத் தெரிய ஆரம்பித்தது’என்றேன்.

இதற்கு இடையில், எனக்கு ஆலோசனை கூறிய நண்பர், மருத்துவக் கல்லூரி பேராசிரியரை ஒருநாள் உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். என் வாய் துர்நாற்றம் முழுமையாக பறந்தோடிவிட்ட செய்தியைக் கூறி, அதற்கு மூலகாரணமாக இருந்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.

சந்தோஷ முகத்துடன் என்னைப் பார்த்தார்... ‘நல்லெண்ணெய்யால் வாய் துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று அவரிடமே கேட்டேன்.

அதற்கு, ‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’என்றார்.

இப்படி, மிகக் குறைந்த செலவில் குணப்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்யின் சிறப்பு தெரியாமல், இவ்வளவு காலமும் இருந்திருக்கிறேனே!

எனக்கு நல்லெண்ணெய் வைத்தியத்தை அறிமுகம் செய்த பேராசிரிய நண்பருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறி முடித்த சுந்தர்ராஜன் முகத்தில் வாய்கொள்ள முடியாத அளவு சிரிப்பு ரேகை படர்ந்திருந்தது!

எலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லிட்டர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உடையவர்கள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌லிரு‌ந்து ‌விடுபடலா‌ம்.

வாய் நாற்றத்தை போக்க எலுமிச்ச பழத்தை ஒரு தம்ளர் நீரில் பிழிந்து அதனுடன் சிறிது அளவு உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லது.

"வாய் துர் நாற்றம்" உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு_ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாயை உப்புகரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக_வைத்திருப்பதும், பற் குழிகளை பல் மருத்துவர்களிடம் சென்று அடைத்துகொள்வதும், தினம் இரண்டு முறை பல் துலக்குவதும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும்.

தமிழ்ப்புத்தாண்டில் வருகிறார் கோச்சடையான்..!



இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள அனிமேஷன் படம் ‘கோச்சடையான்’. கடந்த டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாள் அன்றே இப்படம் திரைக்கு வருவதாக சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டு வந்தது.

அதையடுத்து, டிசம்பரில் ஆடியோவை வெளியிட்டு பொங்கல் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் திரைக்கு வருவது உறுதியானதால், தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்று கோச்சடையான் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கோச்சடையான் ஆடியோவை வாங்கியுள்ள சோனி நிறுவனம் ஆடியோவை பிப்ரவரி 15-ந்தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது.

மேலும், டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீடு நடத்தினால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டிருந்தவர்கள், இந்தமுறை விழா எந்த லொகேசனில் நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நான் சிவப்பு மனிதன் படத்துக்காக ஜிவி பிரகாஷ் இசை..!



நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம்பேக்டரி இணைந்து தயாரிக்கும் படம், நான் சிகப்பு மனிதன். திரு இயக்கும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோ. அவர் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் சுந்தர் ராமு, ஜெகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு தமன் இசை அமைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இதுபற்றி யுடிவி தனஞ்செயன் கூறும்போது, முதலில் ஜி.வி.பிரகாஷ்குமாரிடம்தான் இசை அமைக்கக் கேட்டோம். அவர் மற்றப் படங்களில் பிசியாக இருந்ததால் முடியவில்லை. நாங்கள் படத்தை விரைவில் முடிக்கத் திட்டமிட்டு இருப்பதால் பிறகு தமனிடம் பேசினோம்.

அவரும் சில படங்களில் பிசியாக இருப்பதால் உடனடியாக கம்போசிங்கில் ஈடுபட முடியவில்லை. பிறகு ஜி.வி.பிரகாஷ் எங்களுக்காக விரைந்து முடித்து தர சம்மதித்தார். இப்போது கம்போசிங் நடந்துவருகிறது என்றார்.

 
back to top