.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு..!

``ஜெ.சி.டேனியல்`` - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு...


1930-ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம் அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார்.

இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.

திரைப்படத்தில் கதாநாயகி நாயர் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை எப்படி உயர்ந்த சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்க வைக்கலாம் எனக் கூறி அப்போதிருந்த ஆதிக்க சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட அந்த படத்தை தயாரித்த ஜெ.சி.டேனியல் தன் சொத்துக்கள் பறிபோனதால் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த படத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டதால், மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்தவர் ஜெ.சி.டேனியல் என்ற பதிவு இல்லமலே போனது. அவர் தமிழர் என்ற காரணத்தால் ஜெ.சி.டேனியலுக்கு சேரவேண்டிய மரியாதையை கேரள அரசாங்கம் கொடுக்க மறுத்தது.


இந்த உண்மையை தெரிந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் எடுத்த முயற்சியால், இப்போது கேரள அரசாங்கம் ஜெ.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஜெ.சி.டேனியல் பெயரில் வருடம் ஒருமுறை விருதும் வழங்கப்படுகிறது.

படம் எடுப்பதற்காக ஜெ.சி.டேனியல் எடுத்த முயற்சிகளையும், படம் எடுத்த பின்னர் அவர் பட்ட துன்பங்களையும் தான் வெள்ளித்திரையில் விளக்குகிறது பிருத்விராஜ், மம்தா உட்பட பலர் நடித்திருக்கும் ஜெ.சி.டேனியல் திரைப்படம். மலையாளத்தில் ரிலீஸாகி 7 மாநில அளவிலான விருதுகளை வென்ற இத்திரைப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்

இத்திரைப்படத்தில் இடம்பெறும் ’காற்றே காற்றே’, ’அம்மாடி நான்’ என்கிற பாடல்கள் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றதோடு தமிழிலும் பல ரசிகர்களை கவந்துள்ளது.

விஜயகாந்த் மகனுடன் நடிக்கிறாரா விஜய்..?



கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். விஜயகாந்த் சண்முகபாண்டியனை அறிமுகம் செய்துவைத்த நிகழ்ச்சிக்கு, இயக்குனர்-தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்று வாழ்த்தியிருந்தார்.

அந்த விழாவிலேயே ‘என் மகன்(விஜய்) ஒரு நல்ல பிரேக்குக்காக காத்திருந்த சமயத்தில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நான் கேட்ட ஒரே காரணத்திற்காக கதையே கேட்காமல் நடித்துக்கொடுத்தார்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார் எஸ்.ஏ.சி.

விஜய்க்காக விஜயகாந்த் செய்தது போல தற்போது விஜயகாந்த் மகன் சினிமாவில் அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்திலும் விஜய் நடித்தால் படத்திற்கு ஒரு நல்ல புரமோஷன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக பேசப்படுகிறது. தன் மகன் அறிமுகமாகும் திரைப்படத்தில் விஜயகாந்த் எப்படியும் ஒரு காட்சியில் நடிப்பார் என்று கோடம்பாக்கத்து குருவிகள் கூவிக்கொண்டிருந்த நிலையில், விஜய் நடிப்பதாக பேசப்பட்டது மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அஜீத் - விஜய்; பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்கப்பா..!


எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன் பின்பு தான் இந்த ஒரே நாள் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது.

இந்த வருட பொங்கலுக்கு கைவிட்ட பழக்கத்தை கையிலெடுத்திருப்பது ஜில்லா டீம் தான். படம் துவங்கியபோதே ஜனவரி 10 ரிலீஸ் என அறிவித்து விட்ட வீரம் டீமுடன், பொங்கல் ரிலீஸ் என்று படப்பிடிப்பை துவங்கிய ஜில்லா டீம் 10-ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டது.

ஜனவரி 10-ஆம் தேதிக்காக கிளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருப்பதுபோல் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இரண்டு திரைப்படத்தில் வரும் உண்மையான க்ளைமேக்ஸ் காட்சியும் அதிரடித்திருவிழாவாம். அண்ணன் - தம்பிகள் என ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘விநாயகம் பிரதர்ஸ்’ கதை தான் வீரம் என்றாலும் க்ளைமேக்ஸில் 20 நிமிட சண்டை காட்சிகள் உணர்ச்சிகரமான சீன்கள் தானாம்.

அப்பா - மகனின் (சிவன் - சக்தி) ஆக்‌ஷன் கலந்த கதை தான் ஜில்லா. நூறு ஏக்கர் சோளக்காட்டில் ஏரியல் வியூவில் எடுக்கப்பட்ட க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி தான் ஜில்லாவின் ஸ்பெஷல். அவுங்கவுங்க ஆளுக அவுங்கவங்க பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்க.

ஊர் சுற்றலாம் வாங்க.. - சென்னை ..!



சென்னை

தலைநகரம் : சென்னை

பரப்பு : 174 ச.கி.மீ

மக்கள் தொகை : 4,216,268

எழுத்தறிவு : 3,079,004 (80.14%)

ஆண்கள் : 2,161,605

பெண்கள் : 2,094,663

மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 24,231

அமைவிடம்:

தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வரலாறு :


சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது : அதன் பின் நாடு சுதந்திரமடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழேயே இருந்தது.

சட்டசபைத் தொகுதிகள்-14

ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதா கிருஷ்ணன்நகர், பார்க்டவுண், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், தியாகராஜநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை.

பாராளூமன்றத் தொகுதிகள்-3

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

வழிபாட்டிடங்கள்:


கந்தகோட்டம், வடபழனி, மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்டலட்சுமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, ஸ்ரீராகவேந்திர மடம், சாந்தோம் சர்ச்.

சுற்றுலாத் தலங்கள்

வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலுர் மிருகக் காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, மியூசியம்.

வள்ளுவர் கோட்டம்,


இது சென்னை மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தேர் போன்ற அமைப்பு காணப்படுகிறது. 133 குறள்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் பீச்:


சென்னையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை சிறந்த பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

மெரினா பீச்:

இது சென்னைக்கு கிழக்கே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. ஆசியாவின் நீண்ட கடற்கரையான இதன் நீளம் சுமார் 13 கிலோ மீட்டர் ஆகும்.

சிறப்புகள்

தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரம், தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட. பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.

மொழி :

தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது.
 
back to top