.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

`ஐ` - ல் புதுமை அசத்தும் ஷங்கர்..!




 கற்பனையில் மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய, பிரம்மாண்டமான காட்சிகளை திரையில் சாத்தியமாக்கிக் காட்டுவதுதான் இயக்குநர் ஷங்கரின் ஸ்டைல்.

தொழில்நுட்பத்தில் புதிதாக எது வந்தாலும், உடனே அதனை முதல் ஆளாகப் பயன்படுத்தி விட வேண்டும் என்பதில் கமலுக்குப் போட்டியாக எப்போதும் களத்தில் நிற்பவர். திரையில் எவையெல்லாம் சாத்தியமில்லையோ அது அனைத்தையும் சாத்தியம்தான் என்று ஹாலிவுட்டுக்கு இணையாக நிலைநாட்டி வருபவர்.

தொழில்நுட்பத்தையும் காட்சியமைப்பையும் இணைப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான் என்றநிலையில் தற்போது விக்ரம், ஏமி ஜேக்‌ஷனை வைத்து இயக்கிவரும் ‘ஐ' படத்தில் என்ன புதுமையைச் சேர்த்து ரசிகர்களை மலைக்க வைக்கப் போகிறார் என்று விசாரித்தபோது, ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் கிடைத்தன. ஷங்கர் படங்களில் கிராபிக்ஸ் நுட்பத்தின் உச்சம் ‘எந்திரன்' என்றால், கண்டிப்பாக ஒப்பனைக் கலையின் உச்சமாக ‘ஐ' இருக்கப் போவது உறுதி என்கிறார்கள்.

# ‘அவதார்', ‘லார்ட் ஆஃ தி ரிங்ஸ்', ‘ஹாபிட்' என உலகளவில் பரபரப்பைக் கிளப்பிய படங்களின் மேக்கப் விஷயங்களில் பட்டையைக் கிளப்பிய ‘வேட்டா ஸ்டூடியோஸ்' நிறுவனத்தை ‘ஐ’ படத்தின் சிறப்பு ஒப்பனைக்காக அழைத்து வந்திருக்கிறார் ஷங்கர். வேட்டா ஸ்டூடியோஸின் லேட்டஸ்ட் மேக்கப் தொழில்நுட்பத்தால் விக்ரமின் லுக் பேசப்படும் என்கிறது ஷங்கரின் வட்டாரம்.

# ‘ஐ' படத்தில் விக்ரமிற்கு மட்டுமில்லாமல், கதையில் இடம்பெறுகிற முக்கியக் கதாபாத்திரங்களுக்கும் இந்நிறுவனத்தின் மேக்கப் நிபுணர்களே தங்களது வித்தை மூலம் உயிரூட்டியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஏறக்குறைய 30% காட்சிகளில் ஒப்பனையின் மூலமாக மிரட்ட இருக்கிறார்கள். இந்தப் படத்தின் விக்ரமின் தோற்றங்களில் ஒன்று மனிதனா மிருகமா என்று குழப்பத்தை உருவாக்கும் ஒரு லுக். இதில் விக்ரமின் உருமாற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் மிரளப்போவது உறுதி என்கிறார்கள் ஷங்கரின் உதவி இயக்குநர்கள்.

# கபிலன் வரிகளில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு பாடலுக்காக விக்ரம் நடனமாடியிருக்கிறார். இதற்காகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்களான ‘பாஸ்கோ - சீஸர்’ இருவரின் வித்தியாசமான நடன அசைவுகளில் விக்ரம் தூள் கிளப்பியிருக்கிறாராம்.

# இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கிய போது ஷங்கர், நாற்பத்தொரு நாட்கள் சென்னையில் ஷூட் செய்திருக்கிறார். பொதுவாகப் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஷங்கர், இந்தப்படத்திலும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை அதிக நாட்கள் செலவிட்டு எடுத்திருக்கிறார்.

# சில காட்சிகள், ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி ஆகியவற்றை சீனாவில் 45 நாட்கள் எடுத்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டுப் படமாக்கிய காட்சிகள் சீனாவில் படமாக்கிய காட்சிகள்தானாம்.

# சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னை, பெங்களூர், மைசூர், ஒரிசா ஆகிய இடங்களில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரு பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளைச் சென்னையில் படமாக்கத் திட்டமிட்டு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி படுதீவிரமாக நடைபெற்றுவருகிறது.

# ஏமி ஜாக்சனுக்குத் தமிழ் தெரியாது என்பதால் தமிங்கிலீஷில் எழுதிக் கொடுத்துக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முக்கியமான காட்சிகளை எல்லாம், எப்படிப் பேசவேண்டும் என்று ரெக்கார்ட் செய்து, ஏமி ஜாக்சனைக் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். ஏமி அவ்வாறே பேசி நடித்துக் கொடுத்திருக்கிறார்.

# விக்ரமின் எடையை ஷங்கர் குறைக்கச் சொல்லவே இல்லை. ஆனால் அவரே முன்வந்து, எடையைக் குறைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இடையே ஷங்கர் விக்ரமிற்கு போன் செய்து, “சாப்பிடுங்க. ஹெல்த் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், விக்ரம் தான் விடாப்பிடியாக உடம்பை அநியாயத்திற்கு இளைக்க வைத்திருக்கிறார்.

# தமிழ் திரை டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் ஃபிலிம் ரோலில் படமாக்கி வருகிறார் ஷங்கர். ஒளிப்பதிவில் பி.சி.  ராம் அனைத்துக் காட்சிகளையும் இழைத்திருக்கிறார் என்கிறது படக்குழு.

# ‘ஐ' படத்தில் மொத்தம் 6 பாடல்கள். கபிலன், கார்க்கி இருவரும் தலா மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

# ஹாரிபாட்டர் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் உலகப் புகழ்பெற்ற ரைசிங் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.  னிவாஸ் எம்.மோகன் மேற்பார்வையில் ரைசிங் சன் பிக்சர்ஸ் பணியாற்றிவருகிறது.

# படம் தொடங்கப்பட்டபோது, ஒரு பாடலுக்காக மெட்டு ஒன்றைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால் ஷங்கர், இதை வேறொரு சூழ்நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். சில மாதங்கள் கழித்து வேறொரு பாடலுக்கு அந்த மெட்டை உபயோகப்படுத்தலாம் என்று ஷங்கர் கேட்க, ரஹ்மான் “அது போட்டு ரொம்ப காலமாச்சு. புதுசா போட்டுத்தர்றேன்” என்று கூறியிருக்கிறார்.

# அதிக லொகேஷன்கள், செட்டுகள் என நிறைய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். சீனர்களே இந்த இடங்களெல்லாம் எங்கே இருக்க்கிறது என்று அசரும் அளவிற்கு சீனாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் இருக்க போவது உறுதி என்கிறார்கள். ஒவ்வொரு பாட்டையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்று உழைத்திருக்கிறார்கள்.

# சில காட்சிகளையும், புகைப்படங்களையும் ரஜினிக்குக் காட்டியிருக்கிறார் ஷங்கர். அக்காட்சிகள், படங்களை எல்லாம் பார்த்துவிட்டு எப்படி எடுத்தீர்கள் என்று ஆர்வமாகக் கேட்டுப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி.

# ஷங்கரின் கிரியேட்டிவிட்டி யைப் பார்த்து, மிரண்டுபோன ‘வேட்டா ஸ்டூடியோஸ்' நிறுவனத்தினர் இனிமேல் என்ன படம் பண்ணினாலும் சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்களாம்.

#   இதுவரை தொடாத களமான ரெமாண்டிக் த்ரில்லர் வகையில் ‘ஐ’யை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்திருக்கிறார்.

# சின்னப் படங்களின் இயக்குநர்களே 10 உதவி இயக்குநர்களை வைத்துப் பணியாற்றிவரும் இக்காலத்தில் ஷங்கரிடம் 5 உதவி இயக்குநர்கள் மட்டுமே பணியாற்றியிருக்கிறார்கள். 1 அசோசியேட் இயக்குநர், 4 உதவி இயக்குநர்கள். படத்தின் இசைவெளியீட்டை மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். 

8-ம் வகுப்பு தேறியவர்களா ?இத படிங்க.....





சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர் களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்க திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியானது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். இப்பயிற்சி தமிழக அரசால் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: இன்று (10.01.2014) முதல் சென்னை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விருதுநகர், கடலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, நாகர்கோவில், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி: இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயது முதல் 45 வயது வரையான ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்: 3 வாரம். தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள், அசல் கல்வி சான்று, சாதி சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவு சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் ஏதேனும் ஒன்றின் அசல் சான்றிதழ்களை நேரில் வரும்போது கொண்டு வரவேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழகத்தில் உள்ள மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் 21 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை சில்லரை விற்பனை சேவை நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தமிழகத்திலுள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் மற்றும் சென்னை அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெற்று பயிற்சியில் சேருமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் முத்துவீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனுஷ்-விஜய் சேதுபதி இருவரும் இணையும் முதல் படம்...!



ஆர்யாவை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.


ராதிகாவின் “ராடன் நிறுவனம்” மற்றும் லிஸ்டின் ஸ்டீபனின் “மேஜிக் பிலிம் புரொடக்ஷன்ஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். உண்மைக்கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் தனுஷும் விஜய் சேதுபதியும் எதிரும் புதிருமாக கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.


தனுஷ்-விஜய் சேதுபதி இருவரும் இணையும் முதல் படம் இது. தற்போது “புறம்போக்கு” படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்துவரும் ”விஜய் சேதுபதி” அடுத்ததாக தனுஷுடன் இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது.


இதில் ”தனுஷ்” ஜோடியாக நடிக்க, நடிகை ”சமந்தா”வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் ஜோடியாக யாரும் கிடையாதாம். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

‘வீரம்’ – திரை விமர்சனம்...


 


தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்கும் வகையில் படத்தை கொடுத்த ‘விஜயா புரொடக்‌ஷன்’ வெறும் 50 செக்ன்டகளில் தங்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜி.ஆர்-ன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘விஜயா புரொடக்‌ஷன்’ வழங்கும் அஜித்குமாரின் வீரம் என படத்தின் டைட்டில் தொடங்குகின்றது! அப்போதே படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்லி முடிக்கின்றது தயாரிப்பாளர் நிறுவனம்!!!

படத்தில் அஜித்துக்கு நான்கு தம்பிகள்.(இது எல்லோருக்கும் தெரிந்ததே..!!!) படம் ‘ஒட்டச்சரித்திரம்’ என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. படத்தில் தம்பிகள் தான் தனக்கு எல்லாமாக வாழும் அண்ணன். அண்ணன் தான் தங்களுக்கு எல்லாம் என்று வாழும் தம்பிகள். படத்தில் அஜித், 4 தம்பிகள் ஊருக்குள் அநியாயம் செய்யும் எல்லோரையும் ‘சாப்பாடு போட்டு அதன் பின்னன் வெளுத்து வாங்குகின்றார்’ ஏங்க சாப்பாடு போட்டு சாப்பிட்ட பின்னர் வெளுக்குறீங்கண்ணு ஒருவர் கேட்க ‘ஏன்னா… எங்க அடிய வாங்க தெம்பு வேணும்…அதுக்காகத்தான்’ என்று பதில் சொல்லும் அஜித் படத்தின் இன்னொரு எம்.ஜி.ஆர் தான்.

இவர்கள் இப்படி வம்பை விலைக்கு வாங்க… பொலீஸ் இவர்களை பிடிக்க வர அவர்களுக்கு முன் ஜாமீன் எடுத்தே வைக்கும் வக்கீல் கதாப்பாத்திரத்தில் சந்தானம் வருகின்றார். படம் முழுவதும் அஜித் சந்தானம் கூட்டனி சிரிக்க வைக்கின்றது என்பது இன்னும் கவனம் செலுத்த வேண்டியது.

அஜித்துக்கு கல்யாணம் பிடிக்காது அதுக்கான காரணமாக அஜித் சொல்லு காரணம் ‘பொண்ணு என்னவள் நம்ம வாழ்க்கைக்குள் வந்துட்டா அவளுக்கா நாம மாற வேண்டி இருக்கும், நமக்காக அவ மாற வேண்டி இருக்கும்.. ஏன் இந்த கஸ்டம்… நாம நாமாவே இருப்பம்’ என்பது. இது மட்டும் இல்லாமல் பொண்ணு ஒருத்தி வாழ்க்கைக்குள் வந்தா அண்ணன் தம்பிகள் ஒண்ணாக இருக்க முடியாது என்பதாலும் அஜித் கல்யாணத்தை வெறுக்கின்றார். இதனால் தம்பிமார்களும் கல்யாண்த்தை வெறுக்கின்றார்கள். ஆனால் தம்பிகளுக்கு கல்யாண ஆசை ஒரு கட்டத்தில் வர அண்ணன் கல்யாணம் செய்யாமல் தாங்க எப்படி கல்யாணம் செய்வது!!! என்ற குழப்பம்.

அஜித்தின் நீண்ட நாள் நண்பனான ஒட்டச்சரித்திர ஊரின் கலெட்டரான ‘ரமேஸ் கண்ணாவின்’ உதவியுடன் அஜித்துக்கு சின்ன வயதில் ‘கோப்பெருந்தேவி’ ‘கோபு’ என்ற பெண்ணின் மீது அல்ல அந்த பெயரின் மீது ஒரு ஈடுபாடு இருந்தது தெரியவருகின்றது. அப்போதுதான் தமன்னாவின் அறிமுகம்.

இந்த இடையில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் கஜினி பட வில்லன் ‘வீரம்’ படத்தின் முற்பாதியில் வில்லனாக வருகின்றார். இவர்தான் எல்லா அநியாயங்களையும் செய்யும் நாசக்காரன். இவரை அஜித் எதிர்க்கும் காட்சிகளாக இருக்கட்டும், அஜித் தம்பிகள் இவரின் ஆட்களுடன் சண்டை போடும் காட்சிகளாக இருக்கட்டும் சிவா மிரட்டி இருக்காரு. சண்டைன்னா மாஸ்ன்னா எப்ப்படீடீ எடுக்கணும் என்று அவர்கிட்ட படிக்கனும். ‘நா…ம்ம்ம் சொன்னா நாலு பேரும் உன்ன உழுதுடுவானுக..’ என்று அஜித் சொல்லும் போது காதுகள் கிழியுது… என்னமா விசில் அடிக்குறானுக…!!!

தமன்னா படத்தில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் கதாப்பாத்திரம். இவரை தம்பிகள் தேடிப்பிடித்து ரமேஸ் கண்ணாவின் உதவியுடன் அவர்களின் ஊரில் உள்ள கோவில் சிலைகளுக்கு வர்ணம் தீட்ட அழைத்து சென்று தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடி வைப்பதில் இருந்து படத்தில் ரொமான்ஸ் ஆரம்பிக்கின்றது! அதில் ஒரு கட்டத்தில் தமன்னாவின் குழு ராமன், சீதை ராமனின் தம்பிகள் இருக்கும் ஒரு சிலைக்கு வர்ணம் தீட்ட முற்படும் போது ஒவ்வொரு சிலையயியும் தனித்தனியாக பிரித்து வேலை செய்தால் இலகுவில் முடித்துவிடலாம் என்று ஒருவர் சொல்ல… ‘இல்லை ராமன் மனைவி தம்பிகள் என்று இருக்கும் இதை வர்ணம் தீட்ட கூட பிரித்து வைத்து தீட்ட கூடாது’ என்று தமன்னா சொல்ல அதை கேட்டுகொண்டிருந்த அஜித்தின் கல் மனதுக்குள் காதல் மெதுவாக வசப்படுகின்றது.

அப்புறமென்ன?அஜித், தம்ன்னா காதலிக்கின்றார்கள். தமன்னாவின் அப்பாவின் சம்மதம் வாங்குவதற்காக ஊருக்கு செல்கின்றார்கள். அது ஒரு திருவிழா காலம், இப்பதான் படத்தில் முக்கிய திருப்பம். தமன்னாவின் அப்பா நாசர். இவர் ஒரு குட்டி காந்தி போல படத்தில் வருகின்றார். அகிம்சை மட்டும்தான் இவருக்கு பிடிக்கும், சண்டை என்றால் அலர்ஜி என்னும் கதாப்பாத்திரம். இவர் அஜித்தை ஏற்பாரா இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ் விறுவிறுப்பை கூட்டுகின்றது.

இதற்கிடையில் அஜித் ஊருக்கு செற்று அங்கு வரும் பிரச்சனைகள் யாரால் யாருக்கு வரும் பிரச்சனைகள் என்று தெரிந்து தனி ஆளாக வென்று முடிக்கின்றார்.!!! ஊருக்குள் வரும் சண்டையில் அஜித் சொல்லும் வசனங்கள் யாருப்பா அவங்க என்ன கேட்டாங்க? என்று நாசர் அஜித்திடம் கேட்க… ‘சுடுகாட்டுக்கு எப்படி போகனும்ன்னு கேட்டாங்க… நான் அனுப்பி வைத்துட்டேன் போய் சேந்திருப்பாங்க’ என்று சொல்லும வசமாக இருக்கட்டும். சின்ன குழந்தையிடம் ‘நீ எட்டு வரைக்கும் எண்ணு நான் எல்லோரையும் காலி பண்ணீடுறன்’ என்றூ சொல்லும் வசனமாக இருக்கட்டும். படத்தின் மிடுக்கிற்க்கு இன்னும் பலம் சேர்த்தது.

ம. அப்புறம்…படத்தின் பாடல்கள்… அதிலும் முதல் பாடல் மனுஷன் எம்.ஜி.ஆர் தான்பா என்று பக்கத்த இருக்க அண்ணன் சொல்லும் அளவுக்கு சர மாரியா இருந்தீச்சூ.. அதில் அஜித் ஆடும் குத்து ஆட்டம் சொல்ல வார்த்தை இல்லை… தல குத்துன்னா குத்துதான்… அடுத்து தங்கமே தங்கமே பாடல்… படத்தில் மெலடிலையும் மிரட்டி இருக்காரு தேவி ஸ்ரீ பிரசாத்… அந்த பாட்டுக்கான காட்சியமைப்புக்கள் சுவிஸ்சில் எடுக்கப்பட்டது இன்னும் இதமாக இருந்தது. படத்தில் ஜிங் ஜிக்கா பாடல் மிகவும் பொருத்தமான இடத்தில் வரும்… நல்ல ஒரு காட்சியமைப்பு… பரவை முனியம்மாவுக்கு ஒரு ரீ என்டரி பின்னனி இசை பத்தி சொல்லவே தேவையில்லை… சும்மா அதிருது…

படத்தில் காமடி… சந்தானம் இருக்கின்றார். அதுகும் சிறுத்தை சிவா இயக்கத்தில் என்னும் போது எதிர்பார்ப்பு அதிகமாகியது. சும்மா சொல்ல கூடாதுப்பா… என்னா கெமிஸ்டரி என்னா கெமிஸ்டரி… இது போதாதுன்னு நாசரின் சொந்தகாரராக தம்பி ராமையா… முதல் பாதியில் சந்தானம் ரசிகர்களின் வயிறை சிரிச்சே புண்ணாக்க… இரண்டாம் பாதியில் தம்பி ராமையா பார்த்து கொள்கின்றார். படத்தின் என்ன இல்லை எல்லாம் நிறைந்த ஒரு குடுப்ப படத்தை குறைந்த நாட்களுக்குள் தரமாக எடுத்துக்கொடுத்த சிவாக்கு பெரிய ஒரு கும்பிடு… நீங்க அடித்த மொட்டை வீண் போகல பாஸ்… கீப் ரொக்கிங்…!!! வீரம் கொவிங் டு கிற் த ஸ்கை!!!

“எதிரியா இருந்தாலும் அவ நெஞ்சில குத்தனும்டா…” 7 வருட காத்திருப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி… தில்லா சொல்லுவேண்டா… வீரம் கெத்துன்னு!!!

மொத்தத்திலே தீபாவளியும் நமதே பொங்கலும் நமதே…!!!

“வீரம் – அஜித் படத்துக்கு மட்டும் பொருத்தமான தலைப்பு!!!”

 
back to top