.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 13, 2014

இணையத்தில் கசிந்த சூப்பர் ஸ்டார் படம்..!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மோகன்லால், மீனா, நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும் த்ரிஷ்யம் தொடர்ந்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது.

படத்திற்கு வரவேற்பு இருப்பதால் திருட்டு விசிடிக்கள் வெளிவந்திருக்கிறது. இணையதளத்திலும் அப்லோட் செய்துவிட்டார்கள்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர் கேரள டி.ஜி.பி பாலசுப்பிரமணியத்திடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் பொலிசார் படத்தை நெட்டில் விட்டவரை தேடியபோது ஒரு பேஸ்புக் பக்கத்திலும் படம் அப்லோட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பேஸ்புக் முகவரியை தேடியபோது அது கொட்டாரக்கராவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் என்பது தெரியவந்தது. பேஸ்புக்கில் படத்தை அப்போட் செய்ததை அவன் ஒத்துக் கொண்டான். அவனது பேஸ்புக்கில் மட்டும் 10 ஆயிரம் பேர் படத்தை பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் வீட்டில் இருந்து கணனி, ஹார்ட்டிஸ்க், நிறைய புதுப்பட சி.டிக்கள், பென் டிரைவ்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கும் வெங்கட்பிரபு..!



உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு.

லிங்குசாமி படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்தப் படத்திற்கு கல்யாண ராமன் என்ற தலைப்பினை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இதே தலைப்பில் கமல்ஹாசன் நடித்து பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

எனவே தான் இயக்கும் படத்துக்கு அந்த பெயரை வைப்பதற்கு அனுமதி தரும்படி கமலிடமும், பஞ்சு அருணாசலத்திடமும் கேட்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு.

இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்க உள்ளார்.

‘வீரம்’ படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்போவது - நீயா..? நானா..?




அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள ''வீரம்'' படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை வைத்து பாசம், ஆக்ஷன், காதல் கலந்த வீரம் படத்தை இயக்கினார்.

படம் பொங்கல் விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது.

செம மாஸ்:-

வீரம் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் சிவாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். படம் செம மாஸ், சிவா இயக்கம் அருமை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

‘வீரம்’ சிவா:-

இத்தனை நாட்களாக அவர் ‘சிறுத்தை’ சிவாவாக இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் அவர் ‘வீரம்’ சிவா என்று அஜீத் ரசிகர்கள் பெருமையாக தெரிவித்துள்ளனர்.

ரீமேக்:-

வீரம் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து அதை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

ஆரம்பம்:-

தீபாவளி விருந்தாக வந்த அஜீத்தின் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்நிலையில் வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல டக்கரு..! பாராட்டிய விஜய்.....




சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா.

இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சந்தோஷம்.

முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி, படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பார்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி.

மேலும் அஜித் அவர்களின் 'வீரம்' படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன். அதில் பங்குபெற்ற அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
 
back to top