.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!


பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.

 * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.

 * மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

 * ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

 * குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்



கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.

காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.

இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.

மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!

கமல்ஹாசனுடன் நடிகராகிறாரா லிங்குசாமி..?




விஷ்வரூபம் -2 படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு இயக்குனராக தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமி சமீபமாகப் பல படங்களைத் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற தனது அடையாளங்களைத் தாண்டி, கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் ஒரு நடிகராகவும் மாறுவார் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் உத்தமவில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தைத் தயாரித்து, இயக்கிவருகிறார். இப்படத்தின் தலைப்பு
விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

முஸ்லிம்கள் தொப்பி, பர்தா அணிந்து படமெடுத்தால் அடையாள அட்டை இல்லை...!



அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். (13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விஷயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2014ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை, இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.

எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 
back to top