.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

சூர்யாவின் அஞ்சான்..!

சூர்யாவின் அஞ்சான்..!


சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

சிங்கம் -2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு மன்னார் அல்லது ராஜு பாய் என்று தலைப்பிடப்படலாம் என்று வதந்திகள் பரவிவந்தன. மேலும் இப்படத்தின் டைட்டிலை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது. முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுபோல இப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!




முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).

ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது விஜய் சம்பளத்தைவிட இரண்டு கோடி அதிகமாக ரூ 20 கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். இதை கேட்ட விஜய் முதலில் அதிர்ந்து போனாராம்.

பின்னர் இதையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருப்பது தான் நல்லது என அமைதியாக போய் விட்டாராம். ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

 
back to top