.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

அதுதான் நல்ல நட்பு ..! -



வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது .

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும் அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்..

என்றும் பாகற்காய்! எதிலும் பாகற்காய்!...




நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக..? எச்சரிக்கை..!



நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?

நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது.

பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

‘ஜில்லா’வில் மாற்றம்..?


ஜில்லா படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட 10 நிமிட காட்சி குறைக்கப்பட்டுள்ளது.

இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான்.

நேற்று படம் பார்த்த பல ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளத்தை தற்போது 10 நிமிடம் குறைத்துள்ளனர்.

நீளம் குறைக்கப்பட்ட படம் இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது.

 
back to top