.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!
 

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான்.

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது.

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

சிவகார்த்தி கேயனைவிட நான் மட்டமா என்ன..? – தயாரிப்பாளரிடம் சீறித்தள்ளிய ஜீவா..!



கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்..புகழடைய வேண்டும்..! என்பதே சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு லட்சியமாக இருக்கும்.

ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா நடிகரானதற்கு இவை எதுவுமே காரணமாக இல்லை போலிருக்கிறது.

அவரைப் பற்றி காதுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சொல்வதென்றால்…

முன்னணி கதாநாயகிகளை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே காமத்தினால்… ஸாரி…காரணத்தினால்தான் இவர் கதாநாயக நடிகரானாரோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இப்படி சொல்லுமளவுக்கு என்ன நடந்தது?

‘ஆசைஆசையாய்’ படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஜீவாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறது.

அவரிடம் கதை சொல்லப்போகும் இயக்குநர்களிடம், கதை என்ன, சம்பளம் என்ன என்ற கேள்விகளுக்கு முன் ஜீவா கேட்கும் ஒரே கேள்வி… ‘ஹீரோயின் யாரு?’ என்பதுதான்.

கதாநாயகி விஷயத்தில் அறிமுகநிலையிலேயே இப்படி அநியாயத்துக்கு ‘ஆர்வம்’ காட்டிய ஜீவா வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும்?

ராம், டிஷ்யூம், ஈ போன்ற படங்களில் நடித்த பிறகு தன்னை புக் பண்ண யார் வந்தாலும், ‘எனக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயினாக கமிட் பண்ணுங்க’ என்பதை ஓட்டை ரெக்கார்டு போல சொல்லிக் கொண்டே வந்தார்.

அப்போது அவரது மார்க்கெட் இருந்த லட்சணத்தில், ‘உன்னை வச்சு படம் எடுக்கிறதே பெரிய விஷயம்.. இதுல உனக்கு பெரிய ஹீரோயின் கேக்குதா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஜீவாவின் இந்த ஆசையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பிறகு, ‘த்ரிஷாவை கமிட் பண்ணுங்க’ என்று திரி கொளுத்த ஆரம்பித்தார்.

ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஜீவாவின் இந்த ஆசை அண்மையில்தான் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் நிறைவேறியது.

ஜீவாவின் கேரியரிலேயே ‘என்றென்றும் புன்னகை’ படம் சுமாரான வெற்றிப்படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. ப்ளாப் படங்களில் நடித்தபோதே த்ரிஷாவைக் கேட்டவர், சுமாரான வெற்றிப்படம் கொடுத்துவிட்டு சும்மா இருப்பாரா?

தற்போது அவரை அணுகும் இயக்குநர்களிடம் காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அமலாபால் ஆகியோரது பெயர்களைச் சொல்லி இவர்களில் ஒருத்தரை எனக்கு ஜோடியாக கமிட் பண்ணுங்கள் என்கிறாராம்.

‘நீங்க சொல்ற ஹீரோயின்ஸ் சம்பளம் எல்லாம் ஒரு கோடிக்கு மேல இருக்கு..நம்ம பட்ஜெட்டுக்குக் கட்டுப்படியாகாது’ – என்று ஒரு தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்டதும் ஜீவா டென்ஷனாகிவிட்டாராம்.

‘நேத்து வந்த சிவகார்த்திகேயன் எல்லாம் ஹன்சிகா, அமலாபால்னு போய்க்கிட்டு இருக்காங்க. நான் என்ன சிவகார்த்திகேயனைவிட மட்டமா?’ என்று எகிறியவர், ‘அப்ப ஒண்ணு பணணுங்க..சில வருஷம் வெயிட் பண்ணுங்க. நான் இன்னும் பெரிய ஹீரோவா ஆனப்புறம் வாங்க. அப்ப கால்ஷீட் தர்றேன்.’ என்று கடுப்படித்துவிட்டு போனை கட் பண்ணிவிட்டாராம் ஜீவா.

நடிகைகங்களை கட்டிப்புடிக்கிறதுக்காக இப்படியா கண்ணு மண்ணு தெரியாம நடந்துக்கிறது?

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!


பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.

 * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.

 * மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

 * ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

 * குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்



கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.

காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.

இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.

மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!

 
back to top