.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் எம்.ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் அறிமுகமானார். அறிமுகப் படமே அட்டகாசமான வெற்றியைத் தந்ததால், அப்படத்திற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

சசிக்குமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது கதிர்வேலன் காதல். உதயநிதி ஸ்டாலினுக்கும் இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா உதயநிதியின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தினைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் ”காதலித்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்ககூடாது; இது பசங்களுக்கும் சரி, பொண்ணுங்களுக்கும் சரி நல்ல விசயம்தான்” என்று விளையாட்டாகத் தெரிவித்தார்.

இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது.

கணினியில் இருந்து கண்களைக் காக்க ..!

கணினியில் இருந்து கண்களைக் காக்க..!


கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.

3. மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4. கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்.   

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

 

இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.

 ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும். அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.

 * பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.

 * உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.

 * எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.

 * சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!
 

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான்.

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது.

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

 
back to top