.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 15, 2014

'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி - பொங்கல் கொண்டாட்டம் மிஸ்



அனேகன் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் பொங்கல் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணுகிறார்.

கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தனுஷ் படப்பிடிப்பில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பாலிவுட் படமான இஷாக் மூலம் அறிமுகமான அமீரா நடிக்கிறார். அனேகன் படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான லுக்கில் வருவார் என்று கே.வி. ஆனந்த் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

காதல், ஆக்ஷன் கலந்த அனேகன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பணியை கவனக்கிறார்.

Tuesday, January 14, 2014

விஜய் சேதுபதியின் '' வசந்தகுமாரன் '' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் ஃபர்ஸ்ட் லுக்..!


கோலிவுட்டின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் வசந்தகுமாரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ 9 தயாரித்துவரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். ஆனந்த்குமார் இப்படத்தினை இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயனண் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி திரைப்படம் ஜனவரி 24லிலும், பண்னையாரும் பத்மினியும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதியும் வெளியாகவுள்ளன.

விஜய் சேதுபதி தற்பொழுது ஆர்யா மற்றும் ஷ்யாமுடன் புறம்போக்குபடத்திலும், இடம் பொருள் ஏவல், வன்மம், மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார்.

சூர்யாவின் அஞ்சான்..!

சூர்யாவின் அஞ்சான்..!


சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

சிங்கம் -2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு மன்னார் அல்லது ராஜு பாய் என்று தலைப்பிடப்படலாம் என்று வதந்திகள் பரவிவந்தன. மேலும் இப்படத்தின் டைட்டிலை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது. முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுபோல இப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

 
back to top