.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

பாக்ஸ் ஆபீஸில் 'தங்க வேட்டை' நடத்தும் வீரம், ஜில்லா..!



பொங்கலுக்கு ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன.

இது 2014ம் ஆண்டின் சிறப்பான துவக்கமாக அமைந்துள்ளது என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.25 கோடி

 வீரமும் சரி, ஜில்லாவும் சரி ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


கமலை தொடரும் விஷால்.....



‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலின் கதாபாத்திரத்திற்கு முன்னுதாரணம் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் திரு.
பாண்டிய நாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்துவருகிறார் விஷால்.

இப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இயக்குகிறார். விஷாலுடன் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ஒரு மனிதனின் ஆசைகள் பற்றிய கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’. நாயகன் என்ன ஆசைப்படுகிறான். அதைநோக்கிச் செல்லும்போது என்னென்ன தடைகள் வருகின்றன? எல்லாவற்றையும் மீறி எப்படி தடைகளை எதிர்கொண்டு தனது ஆசையை அடைகிறான் என்பதே படத்தின் கதை.

“இந்தப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது. சினிமாவில் பொலிஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன், துரோகி, விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு.

ஆனால் இந்தப்படத்தில் விஷால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு எந்த முன் மாதிரியும் இல்லை. காரணம் கதை புதிது.. கதாபாத்திரம் புதிது என்று கூறியுள்ளார்.

மேலும்‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலுக்கு ராசியான ஜோடியாக மாறியுள்ள லட்சுமி மேனனுக்கு இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம் கொடுக்கப்பட்டுள்ளது

அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா அஜித்..? 25 கோடி சம்பளம்…!




ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்ட நிலையில்,  இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு.

அதற்கான விடையாக, ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேட்டியளித்தார் அஜித்.

அவரது கருத்து அப்போது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை அஜித்.

இதற்கிடையில் யங் சூப்பர் ஸ்டார், ஓல்டு சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சிம்பு போன்றவர்கள் சுய (தம்)பட்டத்தோடு கிளம்பினார்கள்.

இன்னொரு பக்கம், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்க அவரது அப்பாவின் மூலம் சில பல காய்நகர்த்தல்கள் நடைபெற்றன.

ஊடகங்களின் உதவியுடன் இப்படி எல்லாம் ‘செட்டப்’ செய்தாலும், விஜய் நடித்த படங்களின் தொடர் தோல்வி அவர்களின் முயற்சியை காலி பண்ணிவிட்டது.

விஜய்யின் கதை இப்படி என்றால், ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சொன்ன அஜித்தோ, நடிப்பில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று திசைமாறிச் சென்றார்.

நல்லவேளை, கண்கெடுவதற்கு முன்பே சூரியநமஸ்காரம் செய்ய, அதாவது நடிப்பில் கவனம் செலுத்த திரும்பி வந்தார்.
பில்லா 2 போன்ற சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், சுதாரித்துக் கொண்டு சரியான இயக்குநர்களை, கதையை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார் அஜித்.

குறிப்பாக ஆரம்பம், வீரம் படங்களின் அதிரடி வெற்றியின் மூலம் தற்போது விஸ்வரூபமே எடுத்துவிட்டார் அஜித்.

இன்றைய தேதியில் சூர்யா, விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களையும்விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகி இருக்கிறார் அஜித்.

அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?


25 கோடி!

”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று அன்று சொன்னதை, அஜித் உண்மையாக்கும் நாள் வெகு அருகில் என்றே தோன்றுகிறது.

அஜித் – கௌதம் மேனன் கூட்டணி உறுதியானது..!



அஜித் நடிப்பில், கௌதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆரம்பம் படத்தின் படப்படிப்பு முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம் படத்தை ஆரம்பித்தார் அஜித்.

இப்போது, அடுத்த படம் யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டார். இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஆரம்பம் படம் தயாரித்த ஏஎம் ரத்னத்தின் சத்யசாய் நிறுவனத்துக்கே தந்துள்ளார் அஜித்.

இயக்குபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்று அஜித் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீசத்யசாய் நிறுவனத்துக்காக அஜித் நடிக்கும் படத்தை இயக்க, இன்று கௌதம் மேனன் கையெழுத்திட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனனும் அஜித்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இணையவிருந்தனர். படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.

இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கூடிவந்துள்ளது. ஆரம்பம் படத்தைத் தயாரித்தாலும், கடன்கள் முழுமையாக அடையாமல் ஏஎம் ரத்னம் சிரமப்படுவதைப் பார்த்து அவருக்கு மீண்டும் படம் நடித்துத் தருகிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

 
back to top