.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 17, 2014

சவுரவ் கங்குலி , மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு : அரசியலில் ஈடுபட திட்டமா?



முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

அவர் மம்தாவை சந்தித்தது அரசியலில் ஈடுபடப்போவதற்கான அறிகுறி என அனைவரும் கருதிய வேளையில் மறுபடியும் அவர் இதை மறுத்துள்ளார்.

தான் ராஜர்ஹட் பகுதியில் சேட்டிலைட் பகுதியில் தொடங்கவுள்ள தனது பள்ளிக்கூட திட்டம் சம்பந்தமாக தான் பேசியதாகவும், மற்றபடி அரசியல் சம்பந்தமாக மம்தாவிடம் எதுவும் பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அம்மாநில இளைஞர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருப் பிஸ்வாசும் கங்குலி பள்ளி சம்பந்தமாக தான் முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார்.

மணிரத்னம், நாகார்ஜுனா - ரீ என்ட்ரி...



தெலுங்கு ஹீரோக்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா-- நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

கார்த்தி மகன் கவுதம் அறிமுகமான கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இந்திப் படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

ஆனால், இப்போது தெலுங்கு ஹீரோக்களான மகேஷ் பாபு மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி மணிரத்னம் தரப்பில் விசாரித்தபோது, ஆக்ஷன் கதையான இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. 

தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமிழ் மற்றும் மலையாள முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள் என்றனர். படத்துக்கு  தயாரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.

நாகார்ஜுனா நடிப்பில் இதயத்தை திருடாதே படத்தை மணிரத்னம் ஏற்கனவே இயக்கி இருந்தார்.

விஜய் மற்றும் மகேஷ்பாபு நடிப்பில், கல்கியின் பொன்னியின் செல்வனை ஏற்கனவே படமாக்க இருந்தார் மணிரத்னம். சில காரணங்களால் அது நின்றுபோனது குறிப்பிடத்தக்கது

நீண்ட காலத்திற்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ...!



ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.

அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய விழாவில் தான் இவ்விருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

"லைப் ஓ.கே" திரை விருது விழங்கும் நிகழ்ச்சியில் ரேகா பங்கேற்று அதை ரசித்து பார்த்துகொண்டிருந்தபோது, அமிதாப், ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கு வந்தனர். அபிஷேக் ஊடகத்துறையினருடனும், அமிதாப் விருந்தினர் ஒருவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயாபச்சன் எதேச்சையாக ரேகாவின் இருக்கைக்கு அருகே வந்தார். ரேகாவை பார்த்தவுடன் விலகிச் செல்லாமல் அவரை பார்த்து புன்னகைக்க அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.

பின்னர் தனது இருக்கையிலிருந்து எழுந்த ரேகா ஜெயாவுடன் கைகுலுக்கியதுடன் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அமிதாப்பும் ரேகாவும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1981 ஆம் ஆண்டு வெளியான "சில்சிலா" படமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். இப்படத்தில் ஜெயாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரெடியா...? நாசா அறிவிப்பு....



செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும்.

நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
back to top