.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

கட்டி பிடிங்க..! ரத்த அழுத்தம் குறையும், மூளை சுறுசுறுப்பாகும்..!



நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும்.

இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது.

இது தவிற கட்டி தழுவுவது உங்களை மேலும் மென்மமையாக மாற்றும். அத்துடன் உங்கள் அன்புக்குரியோரை நீங்கள் அடிக்கடி தழுவி கொள்வது அவர்கள் உடையே ஆன அன்பை மேம்படுத்தும். இது கால போக்கில் உறவில் ஏதும் சிக்கல் ஏற்பட்டாலும், அதனை அறுத்தெறிய வழிவகுக்கும். குற்றமே செய்தாலும் அந்த நம்பிக்கை உரிய அன்பானவர்கள் உங்கள் முந்தய அன்பான நடவடிக்கைகளை எண்ணி தவறையும் மறப்பார்கள்.

ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

மேலும் நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.

அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, அந்த தழுவதலின் மூலம் ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும்.

அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பு காலப்போக்கிலும் மேம்படாது என்று இந்த ஆய்வின் முடிவில் நரம்புநோய் மருத்துவர் சாண்ட்க்யூளர் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் 'தங்க வேட்டை' நடத்தும் வீரம், ஜில்லா..!



பொங்கலுக்கு ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன.

இது 2014ம் ஆண்டின் சிறப்பான துவக்கமாக அமைந்துள்ளது என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.25 கோடி

 வீரமும் சரி, ஜில்லாவும் சரி ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


கமலை தொடரும் விஷால்.....



‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலின் கதாபாத்திரத்திற்கு முன்னுதாரணம் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் திரு.
பாண்டிய நாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்துவருகிறார் விஷால்.

இப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இயக்குகிறார். விஷாலுடன் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ஒரு மனிதனின் ஆசைகள் பற்றிய கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’. நாயகன் என்ன ஆசைப்படுகிறான். அதைநோக்கிச் செல்லும்போது என்னென்ன தடைகள் வருகின்றன? எல்லாவற்றையும் மீறி எப்படி தடைகளை எதிர்கொண்டு தனது ஆசையை அடைகிறான் என்பதே படத்தின் கதை.

“இந்தப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது. சினிமாவில் பொலிஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன், துரோகி, விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு.

ஆனால் இந்தப்படத்தில் விஷால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு எந்த முன் மாதிரியும் இல்லை. காரணம் கதை புதிது.. கதாபாத்திரம் புதிது என்று கூறியுள்ளார்.

மேலும்‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலுக்கு ராசியான ஜோடியாக மாறியுள்ள லட்சுமி மேனனுக்கு இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம் கொடுக்கப்பட்டுள்ளது

அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா அஜித்..? 25 கோடி சம்பளம்…!




ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்ட நிலையில்,  இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு.

அதற்கான விடையாக, ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேட்டியளித்தார் அஜித்.

அவரது கருத்து அப்போது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை அஜித்.

இதற்கிடையில் யங் சூப்பர் ஸ்டார், ஓல்டு சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சிம்பு போன்றவர்கள் சுய (தம்)பட்டத்தோடு கிளம்பினார்கள்.

இன்னொரு பக்கம், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்க அவரது அப்பாவின் மூலம் சில பல காய்நகர்த்தல்கள் நடைபெற்றன.

ஊடகங்களின் உதவியுடன் இப்படி எல்லாம் ‘செட்டப்’ செய்தாலும், விஜய் நடித்த படங்களின் தொடர் தோல்வி அவர்களின் முயற்சியை காலி பண்ணிவிட்டது.

விஜய்யின் கதை இப்படி என்றால், ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சொன்ன அஜித்தோ, நடிப்பில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று திசைமாறிச் சென்றார்.

நல்லவேளை, கண்கெடுவதற்கு முன்பே சூரியநமஸ்காரம் செய்ய, அதாவது நடிப்பில் கவனம் செலுத்த திரும்பி வந்தார்.
பில்லா 2 போன்ற சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், சுதாரித்துக் கொண்டு சரியான இயக்குநர்களை, கதையை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார் அஜித்.

குறிப்பாக ஆரம்பம், வீரம் படங்களின் அதிரடி வெற்றியின் மூலம் தற்போது விஸ்வரூபமே எடுத்துவிட்டார் அஜித்.

இன்றைய தேதியில் சூர்யா, விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களையும்விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகி இருக்கிறார் அஜித்.

அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?


25 கோடி!

”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று அன்று சொன்னதை, அஜித் உண்மையாக்கும் நாள் வெகு அருகில் என்றே தோன்றுகிறது.
 
back to top