.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

இந்திய இணைய இணைப்பு வேகம்..!



இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா பிட்ஸ் வேகம் தரும்.

இந்தியாவில், 49Mbps வேகத்தில் டவுண்லோட் செய்திட முடியும் என்பதே ஆச்சரியமான ஒரு தகவலாகும். இருந்தாலும், உலக அளவில், அதன் சராசரியான வேகத்துடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவான ஒன்றாகும்.

ரிலையன்ஸ் 4ஜி அதன் உறுதிமொழிக்கேற்ப வேகமான இணைய இணைப்பினைத் தந்தாலும், அது பிரிட்டனில் கிடைக்கும் இணைய இணைப்பினைக் காட்டிலும் 30% குறைவாகவே இருக்கும். பிரிட்டனில் சில இடங்களில் 60Mbps வேக இணைப்பு கிடைக்கிறது.

இணைய இணைப்பு வேகத்தினைக் கண்காணிக்கும் Speedtest.net என்ற இணைய தளம் இன்னும் பல ஆர்வமூட்டும் தகவல்களைத் தந்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 85.54Mbps வேகம் கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சராசரி இணைய வேகம் 18.5Mbps மட்டுமே. மொபைல் நெட்வொர்க் இணைப்பில், அமெரிக்க சராசரி வேகம் 58.25Mbps ஆக உள்ளது.

கூகுள் நிறுவனம், Google Fiber என்ற திட்டத்தின் கீழ் நொடிக்கு 1Gbps (gigabits per second; 1gigabit = 1024megabits) வேக இணைப்பு தருவதாக அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் கான்சஸ் நகரத்தில் அதிக பட்ச வேகம் 49.86Mbps ஆக உள்ளது. இது, அமெரிக்காவில் இரண்டாவது அதிக வேகமாகும்.

உலகிலேயே மிக அதிகமாக இணையத்துடன் இணைப்பில் இருக்கும் நாடாக தென் கொரியா பெயர் பெற்றுள்ளது. இதன் அதிக பட்ச பிராண்ட்பேட் வேகம் 53.3Mbps. சராசரி வேகம் 13.3Mbps. மொபைல் நெட்வொர்க்கில், இந்நாட்டில் இயங்கும் SK Telecom நிறுவனம், தான் அதிக பட்ச வேகமாக 225Mbps அளவினை எட்டியதாக அறிவித்துள்ளது. இதன் LTEA தொழில் நுட்பம், மொபைல் நெட்வொர்க்கில் 50% கூடுதலான வேகத்தில் டேட்டா டவுண்லோடினை அனுமதித்ததாக அறிவித்துள்ளது.

ஹாங்காங் நாட்டில், உலகிலேயே அதிக வேகமான இணைய இணைப்பு (65.1Mbps) வேகம் உள்ளது. இங்கு இணைய இணைப்புகளின் சராசரி வேகம் 10.8Mbps. இங்கு கிடைக்கும் 4ஜி மொபைல் ஸ்பீட் 20Mbps ஆக உள்ளது. இந்தியாவில் 4ஜி இணைப்பினை, பார்தி ஏர்டெல் நிறுவனமும் வழங்க இருக்கிறது. தற்போது புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் இதன் நெட்வொர்க்குகள் இயங்குகின்றன.

இங்கும் மொபைல் போன்களில் இது கிடைக்கவில்லை. இந்நிறுவனத்தின் யு.எஸ்.பி. டேட்டா கார்ட் மூலம் சராசரி டேட்டா டவுண்லோட் 40Mbps கிடைக்கிறது. ஆனால், இது 100Mbps வேகம் அடைய முயற்சிக்கிறது.

மேற்கண்ட தகவல்களிலிருந்து, இந்தியாவின் இணைய இணைப்பு வேகம், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம்.
3ஜி இணைய இணைப்பிற்கான கட்டணம் இந்தியாவில் இதன் பரவலுக்கு ஒரு தடையாகவே உள்ளது. நிறுவனங்கள் இதனால், வலுவான கட்டமைப்பினை அமைக்கத் தயங்குகின்றனர்.

அதிகமான எண்ணிக்கையில் மக்களை 3ஜி அல்லது 4ஜிக்குக் கொண்டுவர, கட்டமைப்பிற்கான செலவு அதிகமாகும். அதற்கேற்ற வகையில், இணைய இணைப்பிற்கான கட்டணத்தை விதிக்க முடியவில்லை. இதனால், இருபக்க இழுபறியாக இணைய வேகம் உள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாகப் பரவி வருவதால், இதன் பயனர்கள், அதிவேக மொபைல் இன்டர்நெட்டினை எதிர்பார்க்கலாம். பெரும் அளவில் மக்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் வீடியோ காண முயற்சிப் பார்கள் என்பதனால், இந்த வகையில் மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும்.

அதனால், குறைந்த கட்டணத்தில் இணைப்பு வழங்கி, இணைய நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப கட்டமைப்பினை வலுப்படுத்த முடியும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி





ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி:-
           
 ஹாலிவுட் சினிமாவின் உயரிய கவுரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இதில் 'கிராவிட்டி' மற்றும் 'அமெரிக்கன் ஹஸல்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகப்படியாக, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறந்த திரைப்பட பிரிவில் 9 திரைப்படங்கள் போட்டியிடுவதால் எந்தத் திரைப்படம் விருதைப் பெரும் என இப்போதே ரசிகர்கள் இடையே விவாதம் ஆரம்பித்துவிட்டது. முழு பரிந்துரை பட்டியல் பின்வருமாறு:

 
சிறந்த திரைப்படம்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

ஹெர்

நெப்ராஸ்கா

ஃபிலோமினா

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த இயக்குனர்


ஸ்டீவ் மெக்குயின் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்)

டேவிட் ஓ ரஸல் (அமெரிக்கன் ஹஸல்)

அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி)

அலெக்ஸாண்டர் பெய்ன் (நெப்ராஸ்கா)

மார்டின் ஸ்கார்சஸே (தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்)



சிறந்த நடிகர்

ச்விடெல் எஜியோஃபோர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

கிறிஸ்டியன் பேல் - அமெரிக்கன் ஹஸல்

மாத்யூ மெக்கானஹே - டாலஸ் பையர்ஸ் கிளப்

ப்ரூஸ் டெர்ன் - நெப்ராஸ்கா

ஃலியார்னடோ டிகாப்ரியோ - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த நடிகை

ஏமி ஆடம்ஸ் - அமெரிக்கன் ஹஸல்

கேட் ப்ளான்செட் - ப்ளூ ஜாஸ்மின்

சாண்ட்ரா புல்லக் - கிராவிட்டி

ஜுடி டென்ச் - ஃபிலோமெனா

மெரில் ஸ்ட்ரீப் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி



சிறந்த திரைக்கதை 

அமெரிக்கன் ஹஸல்

ப்ளூ ஜாஸ்மின்

ஹெர்

நெப்ராஸ்கா

டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த தழுவல் திரைக்கதை 

பிஃபோர் மிட்நைட்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஃபிலோமினா

கேப்டன் ஃபிலிப்ஸ்

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த உறுதுணை நடிகை

லுபிடா நையோங் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜெனிஃபர் லாரன்ஸ் - மெரிக்கன் ஹஸல்

ஜூலியா ராபர்ட்ஸ் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி

சாலி ஹாக்கின்ஸ் - ப்ளூ ஜாஸ்மின்



சிறந்த உறுதுணை நடிகர்

பர்காத் அப்தி - கேப்டன் ஃபிலிப்ஸ்

ப்ராட்லி கூப்பர் - அமெரிக்கன் ஹஸல்

மைக்கெல் ஃபாஸ்பென்டர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜோனா ஹில் - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்

ஜாரெட் லெடோ - டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த அனிமேஷன் திரைப்படம்


தி க்ரூட்ஸ்

டெஸ்பிகபில் மீ - 2

ஃப்ரோஸன்

தி விண்ட் ரைசஸ்



சிறந்த ஒளிப்பதிவு

தி கிராண்ட் மாஸ்டர்

தி கிராவிட்டி

இன்சைட் லெய்ன் டேவிஸ்

நெப்ராஸ்கா

ப்ரிஸனர்ஸ்



சிறந்த ஆடை வடிவமைப்பு

மைக்கல் வில்கின்சன் - அமெரிக்கன் ஹஸல்

வில்லியம் சாங் - தி கிராண்ட் மாஸ்டர்

கேதரின் மார்டின் - தி கிரேட் காட்ஸ்பி

மைக்கெல் ஓ கானர் - தி இன்விஸிபில் வுமன்

பாட்ரிசியா நாரிஸ் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த படத்தொகுப்பு 

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த அயல் மொழித் திரைப்படம்

தி ப்ரோகன் சர்கிள் ப்ரேக்டவுன் - பெல்ஜியம்

தி கிரேட் பியூட்டி - இத்தாலி

தி ஹண்ட் - டென்மார்க்

தி மிஸ்ஸிங் பிக்சட் - கம்போடியா

ஓமர் - பாலஸ்தீன்



சிறந்த ஒப்பனை, சிகையலங்காரம்

டாலஸ் பையர்ஸ் கிளப்

பேட் கிராண்ட்பா

தி லோன் ரேஞ்சர்



சிறந்த கிராஃபிக்ஸ்

கிராவிட்டி

தி ஹாபிட்: தி டீசொலேஷன் ஆஃப் ஸ்மாக்

அயர்ன் மேன் 3

தி லோன் ரேஞ்சர்

ஸ்டார் ட்ரெக் இன்டு டார்க்னெஸ்

தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

 



தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."...

"எப்ப தூக்கம் வரும்பா?"

"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."

"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."

"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."

"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"

"கடவுள்..."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"

"கடிக்காது..."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."

"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"

"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்...."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான் நீ தூங்கு..."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்கு பசிக்குது..."

"கொசு இட்லி சாப்பிடுமா?"

"அதெல்லாம் பிடிக்காது..."

"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"

"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."

"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"

"கேட்டுத் தொலை"

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்கு பல்லே இல்லை..."

"பிறகு எப்படி கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."

"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"

"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"

"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"

  • இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வேலை தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!


இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

 இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்
 
back to top