விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன். சிங்கள ராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்று இருந்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். இக்கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.
பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சினிமா படமாகிறது. பிரவின்காந்த் நடிக்கும் புலிப்பார்வை படத்தில் இந்த காட்சிகள் சேர்க்கப்படுகின்றன. பாலச்சந்திரன் கேரக்டரில் நடிக்க 100 சிறுவர்களை பரிசீலித்து இறுதியில் பொருத்தமான சிறுவனை டைரக்டர் தேர்வு செய்துள்ளார்.
விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவத்தினர் இடையே நடந்த சண்டைகள் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் போன்றவையும் இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகிறது.