முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
அவர் மம்தாவை சந்தித்தது அரசியலில் ஈடுபடப்போவதற்கான அறிகுறி என அனைவரும் கருதிய வேளையில் மறுபடியும் அவர் இதை மறுத்துள்ளார்.
தான் ராஜர்ஹட் பகுதியில் சேட்டிலைட் பகுதியில் தொடங்கவுள்ள தனது பள்ளிக்கூட திட்டம் சம்பந்தமாக தான் பேசியதாகவும், மற்றபடி அரசியல் சம்பந்தமாக மம்தாவிடம் எதுவும் பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அம்மாநில இளைஞர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருப் பிஸ்வாசும் கங்குலி பள்ளி சம்பந்தமாக தான் முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார்.