ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏகன். அஜித் இப்படத்தில் சி.பி.ஐ. ஆபீசராக நடித்திருந்தார்.
தல அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், இறுதிக் கட்டத்தில் தனது கதாபாத்திரம் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால் தன்னால் அஜித்துடன் இணைந்து நடிக்கவியலாமல் போனது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் வரும்காலங்களில் தனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலாக இருந்தாலும், எதற்காகவும் அந்த வாய்ப்பினை நழுவ விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
தல அஜித்துடன் நடிக்கும் இளம் நடிகர்கள் அஜித்தின் பெருந்தன்மையைப் பற்றிப் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.