.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 18, 2014

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம் ..!



தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

* முதன்முதலில் ஒருவரிடம் பேசும்போது, தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச வேண்டும்.

* அதேபோன்று, புதிய நபரிடம் பேசும்போது, தாங்கள் பேசும் நபர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற வேண்டும்.

* பிறருக்கு வந்த அழைப்பை நாம் பெற நேரும்போது, பேசியவரை, தயவுசெய்து காத்திருக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவரை அழைத்து வருவதாக கூற வேண்டும். அதை செய்யாமல், தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே, கூப்பிட வேண்டிய நபரை சத்தமாக அழைக்கக்கூடாது.

* தொலைபேசியில் ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள நேர்ந்தால், அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவும், அரைகுறையாகவும் கேட்டுக் கொண்டு தவறான தகவல்களை தந்துவிடக்கூடாது.

* பேசிவிட்டு, தொலைபேசியை வைக்கும்போது, நன்றி என்று மறக்காமல் கூறிவிட்டு வைக்க வேண்டும்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - IGNOU



இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்பு:-

பி.ஏ.,
பி.காம்., வணிகவியல்
பி.எஸ்.சி., கணிதம்
பி.எஸ்.சி,. வேதியியல்
பி.எஸ்.சி., இயற்பியல்
பி.எஸ்.சி,. விலங்கியல்
பி.எஸ்.சி., தாவரவியல்
பி.எஸ்.டபிள்யூ., சமுகப் பணி (சோசியல் வொர்க்)
பி.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.எட்., கல்வி
பி.டெக்., கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மென்ட்
பி.டெக்., வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம்
பி.எஸ்சி (ஹானர்ஸ்)., ஆப்டோமேட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னீசியஸ்
பி.ஏ., டூரிசம் ஸ்டடீஸ்
பி.பீ.பீ ., பிரிப்ரேட்டரி புரொகிராம்
பி.பி.ஏ., ரீடைலிங் வித் தி மாடுலர் அப்ரோச்

முதுநிலை பட்டப்படிப்புகள்:-

எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., ஹிந்தி
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பப்ளிக் பாலிசி
எம்.காம்., வணிகவியல்
எம்.எஸ்.சி., டயட்டெடிக்ஸ் மற்றும் புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட்
எம்.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
எம்.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
எம்.எச்.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் அட்மினிஷ்ட்ரேஷன்
எம்.ஏ., தொலைநிலைக்கல்வி
எம்.ஏ., சுற்றுலா மேலாண்மை
எம்.பி.ஏ., மனிதஆற்றல் /நிதி/ ஆப்ரேஷன்ஸ்/மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி
எம்.ஏ., கிராமப்புற மேம்பாடு
எம்.ஏ., கல்வி
எம்.காம்., நிதி மற்றும் வரி விதிப்பு
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ்
எம்.ஏ., பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
எம்.ஏ., உளவியல்
எம்.எஸ்சி., கவுன்சிலிங் அண்ட் பேமிலி
எம்.ஏ., எக்ஸ்டென்ஷன் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (மாடுலர் புரோக்ராம்)
எம்.ஏ., அடல்ட் எஜுகேசன்
எம்.ஏ., மானிடவியல்

டிப்ளமோ படிப்புகள்:-

கிரியேட்டிவ் ரைட்டிங் இன் இங்கிலீஷ்
கிரியேட்டிவ் ரைட்டிங் இன் ஹிந்தி
ஏர்லி சைல்டுஹுட் கேர் மற்றும் எஜூகேஷன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பிரைமரி எஜூகேஷன்
மேனேஜ்மென்ட்
டூரிசம் ஸ்டடீஸ்
யூத் இன் டெவலப்மென்ட் வொர்க்
அக்வாகல்ச்சர்
நாட்டிக்கல் சயின்சஸ்
வுமன்ஸ் எம்பவர்மென்ட் மற்றும் டெவலப்மென்ட்
சிவில் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
வேல்யூ ஏடெடு புராடக்ட்ஸ் இன் புரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ்
டெய்ரி டெக்னாலஜி
மீட் டெக்னாலஜி
புரொடக்சன் ஆப் வேல்யூ ஏடெட் புராடக்ட்ஸ்
நர்சிங் அட்மினிஷ்ட்ரேஷன்
டிப்ளமோ
உருது
பிஷ் புராடெக்ட் டெக்னாலஜி

அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிப்புகள்:-

கன்ஸ்டரக்டிவ் மேனேஜ்மென்ட்
வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பவர் டிஸ்டிரிபூசன் மேனேஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:-

லைப்ரரி ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங்
மொழிபெயர்ப்பு
ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
ரேடியோ பிராசரன்
ஆடியோ புரொகிராம் புரொடக்சன்
மெட்டேனல் மற்றும் சைல்டு ஹெல்த்
ஆஸ்பிட்டல் மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட்
ஜிரியேட்டிரிக் மெடிசின்
ரூரல் டெவலப்மென்ட்
ஹையர் எஜூகேஷன்
டிஸ்டன்ஸ் எஜூகேஷன்
ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பினான்சியல் மேனேஜ்மென்ட்
ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்
மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்
இன்டலச்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ்
என்விரான்மென்ட் மற்றும் சஸ்டைனபில் டெவலப்மென்ட்
கம்யூனிட்டி கார்டியோலஜி
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
புட் சேப்டி அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட்
பிளாண்டேஷன் மேனஜ்மென்ட்
பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
இன்டர்நேஷனல் பிசினஸ் ஆப்ரேஷன்ஸ்
அனல்டிகல் கெமிஸ்ரிட்
எஜூகேஷ்னல் டெக்னாலஜி
ஸ்கூல் லீடர்ஷிப் அண்ட் மேனஜ்மென்ட்
எஜூகேஷ்னல் மேனஜ்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்
டீச்சிங் ஜெர்மன் அஸ் எ பாரின் லேங்குவேஜ்
சமூக சேவை

சான்றிதழ் படிப்புகள்:-

கம்ப்யூட்டிங்
லிட்ரசி கரிக்குலம் மற்றும் இன்ஸ்டரக்சன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
நீயூட்டிரசன் மற்றும் சைல்டு கேர்
புட் மற்றும் நியூட்ரிசன்
புட் சேப்டி
ரூரல் டெவலப்மென்ட்
கைடன்ஸ்
டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்
டீச்சிங் ஆப் இங்கிலீஷ்
பிரைமரி டீச்சிங்
சூ அப்பர் ஸ்டிச்சிங்
சூ அப்பர் கட்டிங்
சூ லாஷ்டிங் மற்றும் பினிசிங்
டூரிசம் ஸ்டடீஸ்
கிராப்ட் மற்றும் டிசைன்
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் ஸ்டடீஸ்
ஹூமன் ரைட்ஸ்
கன்ஸ்யூமர் புரொடக்சன்
லேப்ரேட்ரி டெக்னிக்ஸ்
காம்பெடன்சி என்ஹேன்ஸ்மென்ட் பார் ஏ.என்.எம்/எப்.எச்.டபிள்யூ
ஹெல்த்கேர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்
மோட்டார் சைக்கிள் சர்வீஸ் மற்றும் ரிப்பேர்
ஜெர்மன் லாங்குவேஜ்
பிசினஸ் ஸ்கில்ஸ்
நியுபார்ன் மற்றும் இன்பேன்ட் கேர்
மெட்டர்னல் மற்றும் சைல்டு ஹெல்த் கேர்

முதுநிலை சான்றிதழ் படிப்புகள்:-

பார்ட்சிபேடரி மேனேஜ்மென்ட் ஆப் டிஸ்பிலேஸ்மென்ட் ரீசெட்டில்மென்ட் மற்றும் ரீஹெபிலேஷன்
காப்பிஎடிட்டிங் மற்றும் புரூப்ரீடிங்
ரைட்டிங் பார் டெலிவிஷன்
ரூரல் சர்ஜரி

விழிப்புணர்வு படிப்புகள்:-

இன்டெலெக்சுவல் ப்ராப்பர்ட்டி ரைட்ஸ்
அப்ரிசியேஷன் கோர்ஸ் ஆன் என்விரான்மென்ட்

தொடர்புகொள்ள:-

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)
மெய்டன் கார்ஹி, டெல்லி 110 068

தொலைபேசி : 011 29532321
பேக்ஸ் : 011 29536588
வெப்சைட் : www.ignou.ac.in


காணவில்லை..! - உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது



 வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே.

நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்...

சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி இன்று வரை கண்ணீர் விடும் ஒரு தாயிடம் கண்டிருக்கிறேன்.

ஓர் ஐந்து வயது குழந்தையோ ஐம்பது வயது குழந்தையோ, மறைந்து விட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ, பெற்றவர் படும் வேதனை மற்றவருக்குப் புரியாது, என் குழந்தை இந்த மடியில்தான் உறங்கியது, இங்கேதான் விளையாடியது, இப்படித்தான் என்னிடம் கொஞ்சியது, உணவுக் கிடைத்ததோ, இல்லையோ, அதன் உறுப்புக்கள் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ, பால் குடித்ததோ, பசியால் அழுகிறதோ, விபச்சாரத் தொழிலில் விட்டனரோ, இல்லை கொன்றுப் புதைத்தனரோ என்று ஒரு பெற்றவளின், தந்தையின் மனம் படும் பாடு திருடுபவனுக்கும், தேடும் கடமையில் இருக்கும் சிலருக்கும் புரிவதேயில்லை.

இந்தச் சோகத்தைக் கண்டும் காணாமல், புகார் பதியாமல், அல்லது இதுபோல் எத்தனையோ? இதில், இது வேறா என்று சில அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்கள் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிச்சைகாரர்களைப் போல் துரத்தியடிக்கும் சிலரின் அலட்சியம் இவைகள்தான் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது.

1,17,480 குழந்தைகள், 352 மாவட்டங்களில் இருந்து, கடந்த ஜனவரி 2008 முதல், ஜனவரி 2010 வரை, காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 41,546 குழந்தைகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது, அது நீதிக் கேட்டுப் போராட்டம் தொடங்கியபிறகும், தமிழ்நாடு, குஜராத், மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்கள் இன்னும் வழக்குக்காக நேரில் செல்லவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அட இங்குதான் ஒரு பசுவின் கன்றைக் கொன்றக் குற்றத்திற்கு, தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்திருக்கிறான்.

நாட்டில் முக்கியமான அறிக்கை விடும் செயல்கள் பல இருக்க, குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். முக்கியஸ்தர்கள் வீட்டில் இதுபோல் நிகழ்வுகள் நடப்பதில்லை, காரணம் திருடுபவனுக்கு ஒரு பயம் இருக்கலாம், செய்தால், கண்டுபிடித்துக் கழுத்தைத் திருகிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். யாரைக் கொலை செய்தாலும், எந்தக் குழந்தையைத் திருடினாலும் நாட்டில் நீதி எல்லோருக்கும் பொது என்ற நிலை இருந்தால், இங்கே குற்றங்களும் குறைந்து விடுமே.

இருக்கும் நீதியை நிலைநாட்டுவதில், நினைவுப்படுத்துவதில் உள்ள போராட்டம், குழந்தையைத் தேடி அலையும் அலைச்சலை விட மிகக் கொடுமையானது.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தைத் தட்டி எழுப்ப, குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஒரு போராட்டம், வேறொரு நாட்டில், அநீதியான ஒரு சட்டத் தீர்ப்புக் கண்டு ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வயதான பெண் குழந்தை 'லாமியா காம்தி'யைக் கற்பழித்துக் கொலை செய்த 'ஃபையான் காம்தி' என்ற சவூதியரேபிய மத குரு. இவன் பெற்ற தண்டனை, "குருதிப் பணம்" என்று சொல்லப்படுகிற வெறும் அபராதம் மட்டுமே, அதுவும் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்கு.

அந்தக் குழந்தைப் பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறது, பாலூட்டும்போது இறந்த குழந்தைக்காக ஒரு சிறுமியைக் கொன்ற சட்டம், பெற்ற பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு, தாய்க்குப் பணம் கொடுத்தால் போதும் என்கிறது! திரைப்படத்தில் காட்டும் நிழலுக்காய் பொங்கியவர்கள், இந்த உண்மை சுடுகிறது என்று ஒளிந்து கொண்டனரோ?

நீதி கேட்டுப் போகும் இடத்திலும், பெண்ணைப் புணர்ந்து வதை செய்கின்றன சில காவல் நிலையங்கள். ஆந்திராவில், சித்தூரில், விசாரணை என்ற பெயரில் ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்திருக்கிறான் ஒரு வெறிப் பிடித்த காவலன். இன்னும் எத்தனை எத்தனையோ வேதனை தரும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணென்றால் புணர்ச்சி, ஆண் குழந்தை என்றால் பணம், குழந்தையைக் கடத்தி வதைக்கும், பெண்களை நாசமாக்கும் ஒருவனுக்கு, அவனின் தாயோ அவன் வீட்டுப் பெண்களோ நினைவிற்கே வரமாட்டார்களா? சில நிமிடங்களில் அடங்கிப் போகும் உணர்விற்கு இத்தனை மிருகத்தனமா?

குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டுபவர்கள் யாரும் வாழத் தகுதி இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளே.

இப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் நாட்டில், தாய்மை உணர்வு மதிக்கப்படாத நாட்டில், ஒரு குழந்தைக் காணாமல் போனால், அந்தத் தாய்ப் படும் பாடு, எந்தப் பண, உடல் வெறிபிடித்த எந்த அயோக்கியர்களுக்கும் தெரியாது.

எந்த மதமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த நாடோ, குழந்தைகள் எல்லோரும் பறிக்கும் பூக்கள் இல்லை, முகர்வதற்கும், பின் வாடவிட்டுக் கொல்வதற்கும்! எத்தனையோ பந்தங்களை உடையாமல் காத்து, ஒரு புதிய உலகை படைக்கவிருக்கும் அழகான சிற்பிகள் அவர்கள்!

ஒருவரிடம் இருந்து அவர் சொத்தைக் களவாடினால், அவரின் சோகம் இழந்தப் பொருளின் மீது சிறிது காலத்திற்கே, மீண்டும் உழைத்துச் செல்வத்தைச் சேர்த்திடுவார். ஆனால் ஒருவரின் குழந்தையைக் களவாடினால், அவர் உயிரையே களவாடுவது போலத்தான், அந்தக் குழந்தைக் கிடைக்கும்வரை அங்கே உயிரே இருக்காது.

நிச்சயமாய் நாம் மனு நீதிச் சோழனைக் கேட்கவில்லை, மனசாட்சி கொண்ட மனிதர்களைத்தான் வேண்டுகிறோம். குழந்தையைத் தின்னும் நாகரிக மிருகங்கள் நாசமாய்ப் போகட்டும், இனியேனும் இங்கே தாய்மையும் மனிதமும் மலரட்டும்!

உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது, தன் வீட்டில் நெருப்பெரியும் வரை தீயின் கருகும் வாசம் அவர்களைச் சேராது. ஆள்பவர்களும், சட்ட அமைப்புகளும் நீதியை எல்லோருக்கும் சமமாய் வழங்கினால், பணத்தை விட உயிர் பெரிது என்று நினைத்தால், இழந்தவர் நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்தால், இங்கே குற்றம் குறையும், கண்ணீர் குறையும், இல்லையென்றால் இது போன்ற சட்டப் போராட்டங்களே நம் வாழ்க்கையாய் மாறிப்போகும், போராடுவோம், நாளை சந்ததியேனும் நிம்மதியாய் வாழட்டும்!

வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்..!



தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதேபோல், அதிக அளவில் நீலம் கலந்த டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளீச் செய்வதுபோல, கைகளையும் அது ப்ளீச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.

இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!


ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் பளிச்சென்று ஆகும்.

மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

சாதாரணமாகவே கைகள் இறுக்கிப் பிடிக்கும்போது கன்னிப் போவது சகஜம். டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை.

நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
 
back to top