.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 18, 2014

மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி..!



அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர்.

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

 இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர்.

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார்.

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

ஒரே படத்தில் 3 நிஜ சம்பவம்..!



3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது  கற்பவை கற்றபின். இதுபற்றி இயக்குனர் பட்ராம் செந்தில் கூறியதாவது:

 ஈழ தமிழர்கள் பிரச்னைக்காக உயிர் தியாகம் செய்த இளைஞர், தகாத உறவால் அவமானத்தில் தற்கொலை செய்யும் ஜோடி, கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் பெண் என 3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

 தற்கொலை செய்யக்கூடாது என்று அட்வைஸ் சொல்லும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்பவர்கள் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

  சந்தீப்-தருணா, மது - அபினிதா ஆகிய 2 ஜோடிகளுடன் சிந்துகுமாரி மற்றும் சிங்கம்புலி, விசித்ரன், அம்மு, யுவான் சுவாங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், செந்தில் தயாரிப்பு. ஊட்டி, திருச்சி மற்றும் ஆந்திராவில் ஷூட்டிங் நடந்துள்ளது.

என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் போதாது..! - கமல்



என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் பத்தாது என்றார் கமல்ஹாசன். விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் என்னுடன் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் தேதி ஒத்துவரவிரவில்லை.

ஒருவகையில் அது நல்லதுதான். இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்ருதியும் நானும¢ சேர்ந்து நடிப்பது என்பது போதிய அவகாசம் இல்லாத சூழலாக உள்ளது.

அப்படி சேர்ந்து நடித்தால் அது எங்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். சினிமாவில் அவர் இன்னும் சில காலம் அனுபவம் பெற்ற பிறகு என்னுடன் நடிப்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 படத்தில் அவர் எனது மகளாகவே நடிக்கவிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிப்பார். இதற்காக 3 பேரை தேர்வு செய்துவைத்திருக்கிறோம். அவற்றில் பொருத்தமானவர் நடிப்பார். எனது மகனாக புதுமுக நடிகர் நடிப்பார். இவ்வாறு கமல் கூறினா

பெண்களே உஷார் உஷார்...

பெண்களே உஷார் உஷார்...
 

வெளி இடங்களில் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்...!

துபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டின் பெண்கள் பயன் படுத்தும் டாய்லெட்க்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண் ஒருவர், உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி அடிப்பதை கேட்டு திடுக்கிட்டார்.

செல்போனை எடுத்து பார்த்த அந்த பெண் , அதில் டாய்லெட்டை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாண படபதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து, சூப்பர் மார்கெட்டின் நிவாகியிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணிபுரியும் ஒரு இந்தியருக்கு சொந்தமானது என்று தெரியவந்து,

அவர் கைது செய்யப்பட்டு 3 மாதம் ஜெயில் என்றும் தீர்ப்பாகியது, அதுக்குபிறகு துபாயை விட்டும் வெளியேற்ற படுவார்.

வெளியே எந்த இடங்களிலும் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்.

பட்டன் சைஸ் கேமராக்கள் எல்லாம் உலா வரும் காலம் இது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் கூட வெளி ஆட்களை கொண்டு ரிப்பேர் போன்ற வேலைகள் (குறிப்பாக டாய்லெட், பெட்ரூம் போன்ற இடங்களில்) முடிந்தபின்பு அந்த இடங்களை சோதனை செய்து பார்த்துகொள்ளுங்கள்.
நன்றி:முக்கியசெய்திகள்
 
back to top