.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 18, 2014

டப்பிங் படம் வெளியிடும் மாபியா கும்பல் பிரகாஷ்ராஜ் கட்டம்..?




கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ்  கண்டனம் தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. தமிழில் நடித்த பிறகுதான் தேசிய அளவில் பிரபலமாகி, இந்தி படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். கர்நாடகாவில் சமீபகாலமாக தமிழ் உள்பட பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 இது தொடர்பாக போராட்டம் நடத்தவும் கர்நாடக திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் பேசிய பிரகாஷ்ராஜ் டப்பிங் படங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது: டப்பிங் படங்கள் கன்னட படங்களை அழிக்கும் பேய். இதுபோன்ற படங்களுக்கு பெரிய மாபியா கும்பல் உடந்தை யாக உள்ளது.

டப்பிங் படங்களுக்கு கன்னட திரையுலகில் பெரிய ஆதரவு இருப்பதை கேட்டு வருத்தம் அடைகிறேன்.  இந்தநேரத்தில் ராஜ்குமார் உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரி இருந்திருக்கும். கன்னட படங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன்.

 கன்னட படங்களால் வாழ்வு பெற்றுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் டப்பிங் படங்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே கன்னட திரையுலகில் டப்பிங் படங்கள் வருவதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சில டிப்ஸ்..!



சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும் செலவுகளும் மிகவும் உயர்நது விட்டன.

ஆனால் இப்பொழுது, நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இதை செய்யும் முறையை நாம் கீழ் காணும் பகுதியில் பார்க்கலாம். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ஆபத்தில்லாமல் நீக்கும் வகையில் இயற்கையான கலவைகளை இப்பொழுது உங்களால் பெற முடியும். இதற்கு தேவையான பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து பயன்படுத்தினால் தான் நமக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான வழிமுறைகள்:


  •  இரண்டு கோப்பை சர்க்கரை, ¼ கப் தண்ணீர், ¼ கப் தேன், மற்றும் ¼ கப் புதிய எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு செப்பரேட்டரில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • அந்த சாஸ்பேன் அல்லது செப்பரேட்டரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். குறைந்த நெருப்பில் இதை கொதிக்க செய்யுங்கள். இதை ஏறத்தாழ அரை மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது இதன் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றது. 246 டிகிரி வரும் வரை கொதிக்க விடுங்கள். இப்போது அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து அறை வெப்பநிலையில் வைத்து குளிரச் செய்யுங்கள்.

  • உங்கள் அக்குள் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் கழுவியதும் நன்கு துடைத்து உலர வைத்து வியர்வை வராத அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரை அங்கு போடுங்கள். இது இவ்விடத்தில் உள்ள எஞ்சிய ஈரத்தையும் எண்ணை பதத்தையும் உறிந்து கொள்ளும்.

  • இப்போது இயற்கையாக செய்யப்பட்ட இந்த மெழுகு கலவையை ஒரு ஸ்பூன் அல்லது கைகளை வைத்தே அக்குளில் தடவ வேண்டும். ஒரு வேளை நீங்கள் இதை முதல் முறையாக பயன்படுத்தினால் உங்கள் உடம்பில் ஒரு சிறிய பகுதியில் முதலில் பயன்படுத்தி பாருங்கள். இவை எந்த விதத்திலாவது அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. முடி உள்ள கையின் மேல் பகுதி அல்லது கால் ஆகிய இடங்களில் இதை பயன்படுத்தி எவ்வாறு செய்வது என்று உறுதியாக கற்றுக் கொண்டு பின்னர் அக்குளில் பயன்படுத்தி தேவையற்ற முடியை எடுக்க முயலுங்கள். இது எந்தவிதமான அலர்ஜியையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த கலவையை உங்களுடைய அக்குளில் தைரியமாக தடவலாம்.

  • அக்குளில் தடவிய கலவையை சிறிது நேரம் கழித்து அடுத்த கையை வைத்து எடுங்கள். ஆதை எடுக்கும் போது அக்குளின் தோலை மிக உறுதியாக இழுத்து பிடிக்க வேண்டும். அப்போது தான் வலி ஏற்படாது. விரைவாக அங்கு ஒட்டியிருக்கும் மெழுகு போன்ற கலவையை பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்வாறு அழுத்தமாக இழுக்கும் போது தான் அந்த இடத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

  •  அனைத்து முடியையும் எடுத்த பிறகு மெழுகு கலவை ஏதேனும் மீதமிருந்தால் அதை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கழுவி விட வேண்டும். இந்த காரியத்தை செய்த பின் நல்ல மாய்ஸ்ட்ரைஸரை பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் தோலை மிருதுவாகவும் மற்றும் மென்மையாகவும் வைக்கும்.
இந்த மெழுகு போன்ற இயற்கையான கலவையை குளிர்ந்த இடத்தில் வைத்து, எப்போதெல்லாம் முடியை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இதை எடுத்து பயன்படுத்த முடியும்.

இதை உங்கள் கால், கைகள் மற்றும் அக்குள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம்.

இதனை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து நெடுநாட்களுக்கு பயன்படுத்தலாம்.

மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்..!




வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்கு தான். பணம் சம்பாதிப்பது நம் தேவைக்காக, பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே மன அழுத்தமும் வந்து சேர்கிறது.

இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலா தனிமம் ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

புத்தகம் படிப்பது


புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

யோகாசனம்

 தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் போது, மனமானது சாந்தமாகி பின் அமைதி அடையும்.

இசையை கேட்பது

 கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு ரசிப்பதே. வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.

தோட்டக்கலை


 தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.

சமைப்பது


சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து, மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.

எழுதுவது

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணிப்பொறி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.

இது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுவதால், மன பாரம் குறையும். ஆதலால் மனம் விரும்பும் பொழுதுப்போக்கை தேர்ந்தெடுத்து, மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியுடன் இருங்கள்.

மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி..!



அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர்.

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

 இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர்.

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார்.

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.
 
back to top