.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

தனுஷ் - கஸ்தூரிராஜா மோதல்..!



கஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ஐஸ்வர்யா, இன்னொரு மகன் செல்வராகவன், மகள், மருமகன் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இயக்குனர்கள் சரவணன், பொன்ராம், துரை.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படத்தின் பாடலுக்கு அதில் நடித்தவர்களே ஆட்டம்போட்டனர். கஸ்தூரிராஜாவும் ஒரு பாட்டுப் பாடினார். பின்னர் படத்தின் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. பின்னர் தனுஷ் பேசினார். அப்பா நடத்தின் ஆடியோ பங்ஷன்ல முதல் தடவையாக கலந்துக்குறேன். நான் நடிகனாகித்தான் கலந்துக்கணும்னு இருந்திருக்கு. சின்ன வயசுல அவருக்கு பயந்து நாங்க நின்னுக்கிட்டு இருந்த மாதிரியே இன்னிக்கு அவரு பயந்து நின்னுக்கிட்டு இருந்ததை பார்க்க சந்தோஷமா இருந்திச்சு. இந்த படத்துல ஒரு பாட்டு பாடச் சொன்னார். நேரம் இல்லாததால நான் பாடலை. போடா நான் வேற ஆளவச்சி பண்ணிக்கிறேன்னு பண்ணிட்டார். அவருக்காக இந்த மேடையில பாடுறேன் (சில வரிகளை பாடினார்). அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அடுத்த படத்துலையாவது தமிழ் பாடகர்களுக்கு சான்ஸ் கொடுங்க என்றார்.

உடனே மேடைக்கு வந்த கஸ்தூரி ராஜா "தமிழ் தெரியாதவங்கள தமிழ்ல பாட வைக்கிறது தான் சாதனை. இவ்வளவு சொல்ற, நீ மட்டும் இந்தி பேசி நடிக்கலாமா?" என்று திருப்பிக் கேட்டார்.

மீண்டும் மைக் பிடித்த தனுஷ் "அப்பா பேசும்போது நான் ஒரு புனித நூலை எடுத்துக்கிட்டு வந்தேன். குடும்ப சுமையால அதை படிக்க முடியல. இப்போ குடும்ப சுமைய இறக்கி வச்சிட்டேன் அந்த புனித நூலை காணல. அதை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. அந்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கிட்டு போய் பெரிய ஆளாயிட்டோம். நீங்க பேசாம அம்மாவை கூட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு போங்க" என்றார்.

"உங்க அம்மாவ கன்வீன்ஸ் பண்ணிட்டி டிக்கெட் போடு நான் போறேன்" என்றார் கஸ்தூரிராஜா.

கொழுப்புக்கு குட்பை..! உடல் கொழுப்பு அதிகமானால் ..?



நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.

வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.

ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.

காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்

என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.

உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.

எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.

இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

கொழுப்பு என்ன செய்யும்?

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.

இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை


நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தலைப்புகளில் எண்களை பயன்படுத்துவது ஏன்..?



 சினிமா டைட்டில்களில் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது தலை நீட்டுகிறது. த்ரிஷா நடித்த படமொன்றுக்கு ‘எனக்கு 20 உனக்கு 18‘ என்றும், தனுஷ் நடித்த படத்துக்கு ‘3Õ, பாடலாசிரியர் சினேகன் நடித்த படத்துக்கு திரு 420 , சித்தார்த் படத்துக்கு Ô180Õ என  எண்களை கொண்டு பெயரிடப்பட்டது.

அந்தவரிசையில் தற்போது ஒரு படத்துக்கு ‘கண்ணன் 1 காதலி 2Õ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘எண்களை தலைப்பில் பயன்படுத்துவது ஏன்?‘ என்று இப்பட இயக்குனர் ஏ.கோபால்சாமியிடம் கேட்டபோது கூறியதாவது:படத்தின் கதையை சித்தரிக்கும் வகையில்தான் டைட்டில்களில் எண்கள் சேர்க்கப்படுகிறது. அப்படித்தான் இப்பட டைட்டிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரி முடித்து ஜாலியாக பொழுதை போக்கும் ஹீரோ பைரவ் ஒரே நேரத்தில் ஹீரோயின்கள் பார்கவி, மோனிகாவை ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலிக்கிறார். இறுதியில் அவர்கள் 2 பேரில் ஒருவரின் காதல் பிடியில் சிக்குகிறார். மற்றொரு காதலி எடுக்கும் முடிவு என்ன என்பதை காமெடியாக இப்படம் விளக்குகிறது.

எண்களை தலைப்புடன் இணைத்து வைப்பதால் குழப்பம் எதுவும் ஏற்படப்போவதில்லை. தலைப்பு மற்றவரின் கவனத்தை கூடுதலாக இழுக்க வேண்டும் என்பதற்காகவே எண்கள் சேர்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை சாமி-சக்தி ஏற்க, ஜெகன்கல்யாண் இசை அமைக்கிறார் காக பிலிம் தயாரிப்பு.

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன் - நஸ்ரியா உஷார்..!



 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது.

 இயக்குனர்களுடன் மோதல்போக்கு கடைபிடித்தால் பட வாய்ப்பு பறிபோகுமே என்று அவரிடம் கேட்டபோது, ‘நய்யாண்டி விவகாரம் வெளியில் தெரிந்தது ஒரு வகையில் எனக்கு பிளஸ்தான். என்னை வைத்து படம் எடுப்பவர்கள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை புரிந்துகொள்ள அந்த விவகாரம் உதவி இருக்கிறது. அதே நேரம், இனி சர்ச்சையில் சிக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

நஸ்ரியா தமிழில் நடித்துள்ள திருமணம் என்னும் நிக்ஹா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். ‘சல¢லால மொபைல்ஸ்‘ என்ற படத்துக்காக சொந்த குரலில் நஸ்ரியா பாட்டு பாடி இருக்கிறார்.

 இப்பாடல் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நஸ்ரியா தனது இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். தான் பாடிய பாடலுக்கு என்ன பொருள் என்பதை விளக்கி இருக்கிறார். ‘கோழிக்கோடு மலையாள பேச்சு வழக்கு இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது‘ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
 
back to top