சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல் ஆகப்போகிறது நம்ம சிம்புவின் வாலு படத்தில் உள்ள லேட்டஸ்ட் சாங்.
புதுசு புதுசா புது ட்ரெண்ட்களை தன்னுடைய பாடல்கள் முலம் முதன்முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான்.
தன் வழியை பின்பற்றி இன்று உலகளவில் சில பேர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீண்ட நாள் கனவான லவ் அந்தம் என்ற ஆல்பத்தை மாபெரும் உலக இசைக் கலைஞர் எகான் வைத்து எடுத்தும் முடித்து விட்டார்.
பிறகு என்ன? தற்போது நடித்து முடித்து இருக்கும் வாலு படத்தின் ஒரு பாடலில் அவரின் வால் தனத்தை காட்டி விட்டார் சிம்பு.
தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
அதில் நயன்தாரா வேண்டாம், அண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்து உள்ளன என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
ஏற்கனவே எவன் டி உன்ன பெத்தன் பெத்தன் என்ற பாடலை ரசிகர்களின் மத்தயில் பலத்த வரவேற்பு பெற்றுது போல் இந்த பாடலும் மிக பெரிய ஹிட் ஆகும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சிம்பு. இப் பாடலை சிம்புவின் பிறந்த நாளான பிப்வரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விவகாரத்துக்கு பேர் போன சிம்பு விவரமான ஆளும் கூடங்க!!!!