இன்று அவர் தனது 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பாடக்கர் சந்தானம்..
சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் முக்கியக் காமெடியனாக அறிமுகமான சந்தானம், விஜயின் சச்சின், ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், சிம்புவின் வல்லவன் என்று படிப்படியாகப் பிரபல நகைச்சுவை நாயகனாக உருவாகிவந்தார்.
சந்தானத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இயக்குனர் எம்.ராஜேஷின் சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படங்கள் அமைந்தன என்றால் அது மிகையல்ல. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய அப்பாடக்கர் என்ற வார்த்தை மக்களிடையே மிகப்பிரபலமாகப் பேசப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் இவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தன.
தற்பொழுது எண்ணற்ற தமிழ்ப் படங்களில் நடித்துவருவதுடன், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நுழைந்திருக்கிறார் நமது அப்பாடக்கர். விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் அலங்கரித்த இடத்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அலங்கரித்துவருகிறார் சந்தானம்.
நகைச்சுவை நடிகராக இருந்துவரும் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் வருகிற தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மெஹா ஹிட்டடிக்க வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சந்தானம்.