.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...



காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும்.

ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை.

 மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.


இஞ்சி ஜூஸ், புதினா ஜூஸ் , கேரட் ஜூஸ், லெமன் ஜூஸ்,தர்பூசணி ஜூஸ்,வாழைப்பழ ஜூஸ்,கிவி ஜூஸ்,அன்னாசிபழ ஜூஸ்.

 குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

சிம்புவைத் தம்பி என்றழைத்த தனுஷ்..!



லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை நடிகர் தனுஷ் தம்பி என்று அழைத்திருக்கிறார்.

சிம்பு விரைவில் தனது முப்பவதாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். இதுகுறித்து சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தான் இன்னு சில தினங்களில் முப்பது வயதை எட்டவிருப்பதாகவும், தனது டீனேஜிலிருந்தே தனது முப்பதாவது வயதினை எட்டுவது குறித்து விரும்பியதாகவும், தற்பொழுது முப்பதாவது வயதினை அடைந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வண்ணம் தனுஷ் சிம்புவிற்கு “ வா தம்பி, இட்ஸ் நாட் டூ பேடு” என்று பதிலளித்துள்ளார்.

தனுஷ் மற்றும் சிம்புவின் இந்த உரையாடல் அவர்களது ரசிகர்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்துவருகிறார். மேலும் வாலு திரைப்படத்திலும், செல்வராகவன்
இயக்கவிருக்கும் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

தனுஷ் தற்பொழுது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அனேகன் திரைப்படத்திலும், வேல்ராஜ் இயக்கிவரும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்திலும்
நடித்துவருகிறார்.

ஹேப்பி பர்த்டே அப்பாடக்கர்..!



இன்று அவர் தனது 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பாடக்கர் சந்தானம்..

சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் முக்கியக் காமெடியனாக அறிமுகமான சந்தானம், விஜயின் சச்சின், ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், சிம்புவின் வல்லவன் என்று படிப்படியாகப் பிரபல நகைச்சுவை நாயகனாக உருவாகிவந்தார்.

சந்தானத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இயக்குனர் எம்.ராஜேஷின் சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படங்கள் அமைந்தன என்றால் அது மிகையல்ல. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய அப்பாடக்கர் என்ற வார்த்தை மக்களிடையே மிகப்பிரபலமாகப் பேசப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் இவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தன.

தற்பொழுது எண்ணற்ற தமிழ்ப் படங்களில் நடித்துவருவதுடன், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நுழைந்திருக்கிறார் நமது அப்பாடக்கர். விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் அலங்கரித்த இடத்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அலங்கரித்துவருகிறார் சந்தானம்.

நகைச்சுவை நடிகராக இருந்துவரும் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் வருகிற தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மெஹா ஹிட்டடிக்க  வாழ்த்துக்கள்.

 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சந்தானம்.

மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக,சிம்பு - நயன்தாரா...



 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கும் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக வலம் வருகிறார்கள்.கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது புதிய படத்துக்கு சிம்புவை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் நாயகி தேர்வில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இறுதியில் கதைக்கு நடிகை நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்ற யோசனை எழுந்தது.

கதை சொன்னபோது, எந்த மறுப்பும் இல்லாமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு தொடர்ந்து 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஜனவரி முதல் வாரத்தில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

புத்தாண்டை ஒட்டி நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு பொங்கல் விடுமுறையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக சிம்பு - நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடிக்கும் இருவரும் முதல் நாள் படப்பிடிப்பு முதலே உற்சாகமான நண்பர்களாக பேசிப் பழகி வருகிறார்களாம். மதிய உணவு இடைவேளையின்போது இருவரும் படக்குழுவினருடன் உணவை பகிர்ந்து உண்டு, சகஜமாக பழகி வருகின்றனர். தொடர்ந்து இந்த வார இறுதி வரை இருவரும் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கும் சூழலில் சிம்பு- நயன் தாராவின் காதல் காட்சிகள் சிறப்பாக படமாகி வருவதில் கூடுதல் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர், படக்குழுவினர்.

 
back to top