.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, July 4, 2014

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள் - இதோ உங்களுக்காக...!


அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது

சர்க்கரை நோய்க்கு மருந்து கறிவேப்பிலை - உங்களுக்கு தெரியுமா..?

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது.

கறிவேப்பிலை துவையல் செய்முறை:-

ஆய்ந்த கறிவேப்பிலை 2 கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு, 4 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்) சேர்த்து நன்றாக வறுக்கவும். சில நிமிடங்கள் ஆற வைத்து, இதில் உப்பு, நெல்லிக்காய் அளவு புளி, பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

சூடான சாதத்தில் பிசைந்தும், தோசை, இட்லிக்கு தொட்டும் சாப்பிடலாம்

Thursday, July 3, 2014

நான் படித்ததில் எனக்கு பிடித்தது - இதோ உங்களுக்காக...!


* பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.

* மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.

* தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடும்.

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்...!

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன.

மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.
 
back to top