.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 5, 2014

தலைமுடி வளர பயனுள்ள குறிப்புகள்..!

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்

Sunday, November 2, 2014

உங்கள் கணினி Error காட்டுகிறதா..? இதோ தீர்வு..!

நீங்கள் கணினிக்கு புதியவரா? உங்கள் கணினியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு பிழைச் செய்தி தோன்றியிருக்கும்.. ஆனால் அவற்றை என்னவென்று உங்களால் கூற முடியவில்லையா? கவலை வேண்டாம்.. அதற்கான தீர்வை தேடி கூகிள் முதலான தளங்களில் தேடியும், உங்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறதா?

அப்படியானால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மிகச்சிறந்த தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.errorhelp.com/

இந்த தளம் மற்றத் தளங்களைப் போலல்லாமல்நீங்கள் கூறும் பிழைகளுக்கு பிழை உதவி ( Error Help) சரியான தீர்வைத் தேடி தருகிறது.

நீங்கள் உள்ளிடும் பிரச்னைகளுக்கான தீர்வை வழங்கும் இணையதளங்களையும் காட்டுகிறது.. இதற்கு முன்பு பயனாளர்கள் இத்தளத்தில் உள்ளிட்ட கணினி குறித்த  பிழைச் செய்திகளையும், அதற்கான தீர்வை வழங்கிய விபரங்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

ஏற்கனவே அங்குள்ள இத்தகைய தொகுப்பில் உங்களுடைய பிரச்னை ஒன்றாக இருந்தால் நீங்கள் அதையே தீர்வாக பயன்படுத்திக்கொள்ள முடியும். பெரும்பாலான பிரச்னைகள் அனைத்தையும் ஏற்கனவே இதில் உள்ளடக்கி உள்ளதால் இந்த பகுதியும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் தேடும் கணினி பிரச்னைக்கான தீர்வு இத்தளத்தில் இல்லையெனில் விரைந்து அதுகுறித்த தகவல்களை நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தேடித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.. 99.9 சதவிகித கணினி பிழைகளை இத்தளத்தின் மூலமாகவே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெற்றுவிடலாம்..

இந்த தகவல்கள்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.
அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.
ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.
வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட் (Chocolate)

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.


37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன.



இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.



இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்த மட்ட குழுவினர் வாராந்தம் சராசரியாக எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. ஆனால் உயர் குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.


இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாகும்.
நரம்பியல் குறித்த சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃபிளவொனொயிட்ஸ் என்னும் பதார்த்தமே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவ்ரான, சுவீடனின் கரோலின்ஸ்கா கற்கைகள் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.


இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃபிளவொனொயிட்ஸ் செயற்படுகிறது.


இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃபிளவொனொயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.



டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு தற்போது கூறுகிறது.


ஏனைய வகை சாக்லேட்டுக்களை ஓரளவு உண்பதும் நல்ல பயனைத் தரும் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.


ஆனால், இந்த விடயம் குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் அதேநேரத்தில், இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.



அத்துடன் சாக்லேட்டில் அதிகமாக சீனியும் கொழுப்பும் சேர்க்கப்படுவதும் உகந்ததல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

 
back to top