.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 6, 2014

சிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் துளசி...!

திருமாலின் திருக்கோவிலில் தரப்படும் பிரசாத தீர்த்தம் துளசிக்கு முதல் இடத்தை தருவதாக உள்ளது. அந்த தீர்த்தத்தில் துளசியோடு லவங்கம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து நீரிலிட்டுக் கலந்து பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

இவை அனைத்தும் சேர்ந்த கலவை ஓர் அருமையான மருந்தாக அங்கம் முழுவதற்கும் பயன்படுகிறது. துளசி, நற்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி,செந்துளசி, கருந்துளசி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பொதுவாக துளசியில் ராமதுளசி, கிருஷ்ண துளசி என்ற இருவகை துளசியைத் தான் உபயோகப்படுத்துவது வழக்கம்.

ராம துளசி சாதாரண பசுமை நிறத்தையும் பசுமையான காம்புகளையும் உடையது. கிருஷ்ண துளசியோ கரும்பச்சை நிறத்தையும் செம்மையும் சற்று நீலமும் கலந்த வண்ணமுடைய காம்புகளையும் கொண்டிருக்கும். துளசி வயிற்றில் தோன்றித் தேங்கித் துன்பம் தருகிற வாயுவை (காற்றை) வெளியேற்றக் கூடியது.

இதனால் வயிற்றினுள் வாயுவும் அதன் விளைவாகத் தோன்றும் அமிலச் சுரப்பும் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. துளசி வயிற்றிலுள்ள அத்துணைத் துன்பங்களையும் குறிப்பாக வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்புண் (அல்சர்) போன்றவற்றைத் தணிக்கக் கூடியது. விட்டு விட்டுத் தோன்றி வேதனை தரக் கூடிய வலி எதுவாயினும் உடனடியாகத் தணிக்கக் கூடிய வல்லமை துளசிக்குஉண்டு.

ஆஸ்துமா என்று சொல்லக் கூடிய மூச்சு முட்டல் மூச்சிறைப்பு போன்ற ஒவ்வாமையால் வரக் கூடிய கொடுமையான நோயைத் தணிப்பது மட்டுமின்றி அவற்றை ஒட்டாமல் தடுப்பதும் துளசியின் சிறப்பாகும். வாதசுரம் உள்ளிட்ட மூட்டுவலிகளுக்கு வல்லமை மிக்க மருத்துவப் பொருளாக துளசி விளங்குகிறது.

துளசிச் சாற்றைப் பருகுவதாலும் மேலே பூசுவதாலும் இப்பயன் கிட்டுகிறது. எவ்வகைக் காய்ச்சல் ஆனாலும் துளசிச் சாறு பருகுவதால் வியர்வையைப் பெருக்கி உடல் சூட்டைத் தணிப்பதால் காய்ச்சலைக் கண்டிக்கிறது. தொண்டை தொட்டு நெஞ்சறை தொடர்ந்து நுரையீரல் வரை உள்ள சளியை கரைத்து உடைத்து வெளித்தள்ள வல்லது.

உடல் ஆரோக்கியமாகச் செயல்பட அதன் உள்ளுறுப்புகள் செவ்வனே பணிபுரிவது அவசியம். துளசி அனைத்து உள் உறுப்புகளையும் குறிப்பாக சுரப்பிகளை நன்கு இயங்கும்படித் தூண்டி விடுகின்றது. நம் உடலின் மிக உன்னதமான உறுப்புகளின் ஒன்றான ஈரலை நச்சுகளினின்று பாதுகாத்து (ஹெபிபேட்டா புரொடக்டிவ்) நன்னிலையில் இயங்கிச் செய்கிறது.

துளசியின் விதைகள் பாலுறுப்புகள் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் நோய்களைப் போக்கும் மருத்துவ குணத்தைப் பெற்றது ஆகும். துளசியின் வேர்ப்பகுதி மலேரியாக் காய்ச்சலான நடு நடுங்கச் செய்யும் குளிர்காய்ச்சலைப் போக்கக் கூடியது. துளசியை அன்றாடம் உபயோகப்படுத்துவதால் அது பேய்போல ஆட்டுவிக்கும் வெறிநோயைப் போக்கும்.

துளசி, மனம், உடல், ஆவி ஆகியவற்றுக்கு ஆரோக்கியம் அளிக்க வல்லது. சோர்வை நீக்குவது நுண்கிருமிகளைப் போக்க வல்லது. பூஞ்சைக் காளான் நோயைப் போக்கவல்லது. வீக்கத்தைக் கரைக்கக் கூடியது.

ஆயுவேத மருத்துவத்தில் சளி இருமல் காய்ச்சல், இரை, அறைக் கோளாறுகள், வயிற்றுப் புண் ஆகிய நோய்களை குணப்படுத்த துளசி சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஞாபக சக்தியைத் தூண்டவும் துளசி பயன்படுகிறது.

Wednesday, November 5, 2014

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?


சரும புற்றுநோயைத் தடுக்கும்:

சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு:

தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!

இளமையாக இருக்க:

தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் தான்!

குளிரைத் தாங்க:

தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய:

பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு:

ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு:

அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், தாடி இருந்தாலும் எப்போது முகம் ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்.

இதனால் தான் அன்று சித்தர்கள் முனிவர்கள் தாடி உடன் இருந்தார்களா..?
தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு கருத்தும் நன்மைகளும் இருக்கிறது.

காதலுக்கு கண்ணில்லை (2014) - திரைவிமர்சனம்

நாயகன் முரளி (ஜெய் ஆகாஷ்) காதலுக்கு கண்ணில்லை என்னும் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், இப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெறுகிறார். அப்போது அந்த விழாவிற்கு வந்திருக்கும் ஷிவானி (நிஷா) முரளியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர் முரளியிடம், தான் அவரது ரசிகை என்றும் அவரை நேசிப்பதாகவும் கூறுகிறார். இதை முரளியுடன் இருந்து கவனித்த முரளியின் அம்மா இந்து, ஷிவானியை ஒரு நாள் வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு சென்று விடுகிறார்.

அதன்பின்னர் ஷிவானி, முரளி குடும்பத்துடன் பழக ஆரம்பிக்கிறார். முரளியின் அம்மாவிற்கு ஷிவானியை பிடித்து விடுகிறது. ஆதலால் முரளியிடம் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். முரளியும் தன் அம்மாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து, ஷிவானியை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

பின்னர் முரளி-ஷிவானி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அப்போது முரளியின் அப்பா திருமணத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஷிவானி வீட்டில் நிபந்தனை விதிக்கிறார்கள். இதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்து, என் அப்பா கலந்துக் கொண்டால்தான் இந்த திருமணம் நடக்கும் என்றால் எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறார்.

முரளியின் அப்பா யார்? எதற்காக அவரை வெறுக்கிறார்? ஷிவானியை முரளி திருமணம் செய்துகொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தில் முரளி மற்றும் ஆனந்த் என்னும் இரண்டு கதாபாத்திரங்களில் ஜெய் ஆகாஷ் நடித்திருக்கிறார். முரளி கதாபாத்திரத்தில் அமைதியாகவும், ஆனந்த் கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஆனந்த் கதாபாத்திரத்தில் அளவோடு இல்லாமல் அளவிற்கு மீறிய நடிப்பாக எண்ணத் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நாயகி அலிஷா தாஸ் திறமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட திறமையாக அழுதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். படம் முழுக்க அழுது கொண்டே இருக்கிறார். நிறைய சிரமப்பட்டு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கவர்கிறார். மற்றொரு நாயகியான நிஷாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஜெய் ஆகாஷின் அம்மாவாக நடித்திருக்கும் இந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

யு.கே.முரளியின் இசையில் 2 பாடல்கள் மட்டும் கேட்கும் ரகம். தேவராஜ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ஒரு பெண், சைக்கோவாக இருக்கும் ஒருவனை நல்லவன் என்று நம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவனால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை கதைக்கருவாக வைத்துள்ளனர். ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பது படத்திற்கு பின்னடைவு. மேலும் தேவையற்ற காட்சிகளையும் லாஜிக் இல்லாத காட்சிகளையும் இயக்குனர் ஜெய் ஆகாஷ் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘காதலுக்கு கண்ணில்லை’ வலுவில்லை.

உடல் எடையில் நல்ல மாற்றம் தரும் ஜுஸ்கள்

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலை யையும் சரியாகவும், நிம்ம தியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும்.

எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜுஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது.

அது எப்படி ஜுஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜுஸ்களை குடித்தால், ஜுஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.

குறிப்பாக உடல் எடை குறைய வேண்டு மானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ்கள் சிலவற்றைப் பார்ப்போமா!!!

தர்பூசணி ஜுஸ் :

உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜுஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜுஸ் :

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜுஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

அவகேடோ ஜுஸ் :

நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜுஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும்.

மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதோடு ரத்த சுத்திகரிப்பையும் சிறப்பாக மேற்கொள்கிறது. உடலுக்கு கூடுதல் சக்தியையும் வழங்குகிறது.

தக்காளி ஜுஸ் :

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜுஸ் :

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜுஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கிரேப் புரூட் ஜுஸ் :

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு ஜுஸ் :

ஆரஞ்சு பழ ஜுஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜுஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜுஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை ஜுஸ் :

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளி யேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாப்பழ ஜுஸ் :

கொய்யாவில் வைட்டமின் `சி' அதிகம் உள்ளதால், இதனை ஜுஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து விடும்.

பெர்ரிப் பழ ஜுஸ் :

பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன், இந்த ஜுஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.
 
back to top