.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 9, 2014

சுவாசம் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்..?

சுவாசம் நின்று போவதற்கான பொதுவான காரணங்கள்:

>>தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொள்ளுதல்

>>நினைவிழந்த ஒருவரின் தொண்டையில் அவருடைய நாக்கு அல்லது கெட்டியான கோழை அடைத்துக் கொள்ளுதல்

>>நீரில் மூழ்குதல், புகையினால் மூச்சு மூட்டுதல் அல்லது உடம்பில் விஷம் கலத்தல்.

>>தலையில் அல்லது மார்பில் பலமாக அடிபடுதல்

மாரடைப்பு :

ஒருவர் சுவாசிக்கவில்லை என்றால் 3 நிமிடங்களுக்குள் அவர் இறந்து விடுவார்.

வாய் சுவாச முறை :

பின்வரும் முறையில் எவ்வளவு விரைவாகச் செயல்படமுடியுமோ அந்தளவிற்கு விரைவாகச் செயல்படுங்கள்.

முதலாவதாக, வாயில் அல்லது தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டிருந்தால் அதை உடனடியாக அகற்றவும்.

நாக்கை வெளியே இழுக்கவும். தொண்டையில் கோழை இருந்தால் விரைவாக அதை அகற்றவும்.

இரண்டாவதாக, அவரை மல்லாந்து படுக்க வைக்கவும், தலையை நன்றாகப் பின்னனுக்கு வளைத்து, தாடையை முன்னுக்கு இழுக்கவும்.

மூன்றாவதாக, அவருடைய நாசித் துவாரங்களை உங்கள் விரல்களால் மூடிக் கொண்டு அவரது வாயைத் திறக்கவும்.

அவருடைய வாயை உங்கள் வாயால் மூடிக் கொண்டு அவருடைய மார்பு உயரும்படியாக, வலுவாக ஊதவும், பிறந்த குழந்தைகளுக்கு நிமிடத்திற்கு 25 முறை மிகவும் மென்மையாக வாயிலிருந்து மட்டும் ஊதவும்; ஆழ்ந்த மூச்சு எடுத்து ஊதக் கூடாது.

அவர் தானாகவே சுவாசிக்க ஆரம்பிக்கும் வரை அல்லது அவர் இறந்து விட்டார் என்பது நிச்சயமாகும் வரை வாய்க்குள் - வாய் சுவாச முறையைத் தொடரவும். சில சமயங்களில தொடர்ந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.

இதயத்தைப் பிடித்து விடுவதிலுள்ள பிரச்சனைகள்:

இரு கையை வைத்து அழுத்தும்போது அதிகமாக அழுத்தக்கூடாது. அதிகம் அழுத்தினால் மார்பு எலும்பு முறியும், முறியும் விலா எலும்பு ஈரலைக் குத்தி விடலாம். அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராப (முகம் வேர்த்து,தோல் வெளுத்து, பலமில்லாமல், நாடிதுடிப்பு அதிகரித்து) என்பதைக் கவனிக்கவும்.

இது வெப்ப அயர்ச்சியாக இருக்கலாமா?

(வியர்வையில்லாமல், அதிக காய்ச்சல், சிவந்த தோல்) அப்படி இருந்தால் அவரைத் தலையை உயரத்தில் வைத்து, நிழலில் படுக்க வைக்கவும், கழுத்தை வளைக்க வேண்டாம்.

இதயத்தை பிடித்துவிடும் முறை:

>>மூச்சு நின்று போன வரை மல்லாக்கப்படுக்க வைக்க வேண்டும்.
>>அவர் பக்கத்தில் மண்டியிட்டு, அவர் தாடையைப் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும்.

>>வலது கையில் கீழ் பாகத்தை மார்பின் நடுவில் வைத்து அதன்மேல் இடது கையை வைக்கவும்.

>>முட்டியை நேராக வைத்து நெஞ்செலும்பு நடுவில் 1 முதல் 2 அங் குலம் வரை கீழ் அழுத்தவும்.

>> பின் கையை எடுக்காமல் அழுத்தத்தை நிறுத்தவும். ஒரு நிமிடத்திற்கு 60 – 80 தடவை இந்த முறையைக் கையாளவும்.

>>சிறு பிள்ளைகளுக்கு இரு விரல்களை மட்டும் வைத்து அழுத்தவும், மூச்சும், இதயத்துடிப்பும் நின்றுவிட்டால் மார்பை அழுத்துவதையும் வாய்க்குள் – வாய் சுவாச முறையையும் செய்யவும். இருவர் இருந்தால் ஒருவர் அழுத்தி விட மற்றவர் வாய்க்குள் – வாய் சுவாச முறை செய்யவும்.

>>ஒருவர் தானே மூச்சுவிடும் வரை அல்லது அவர் இறந்தார் என்ற நிலை அறியும் வரை இந்த முறைகளைக் கையாளவும். அரைமணி நேரம் செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாவிட்டால் நிறுத்தவும்.

இயற்கை மருத்துவம் - சில தகவல்கள் இதோ உங்களுக்காக..!

இயற்கை மருத்துவம் :-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Friday, November 7, 2014

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்..!

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.

நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும்.

குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.

1.வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

2.துளசி :

துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

3.குளிர்ச்சியான பால் :

பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

4.சோம்பு :

இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.

இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

5.சீரகம் :

சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.

அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.

6.கிராம்பு :

இது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.

இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.

7.ஏலக்காய் :

சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.

இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

8.புதினா :

புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.

9.இஞ்சி :

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.

வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.

10.நெல்லிக்காய் :

இதில் அதிகளவு வைட்டமின் `சி' உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.

எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்..!

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி கிவி பழம் :

நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி  :

செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா  :

கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ' மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம்  :

கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

பீச்  :

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பெர்ரிப் பழங்கள்  :

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆப்பிள்  :

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி  :

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

பேரிக்காய்  :

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பப்பாளி  :

பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப்பழம்  :

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆரஞ்சு  :

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி' இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தர்பூசணி  :

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

கிரேப் ஃபுரூட்  :

ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.

மாதுளை  :

அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பலாப்பழம்  :

பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.

நெல்லிக்காய்  :

கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி' மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

முலாம்பழம்  :

முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

நட்சத்திரப் பழம்  :

இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

வெள்ளை கொய்யா  :

நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.

உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

 
back to top