ரசித்த உரை மொழிகள் சில>>>1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்...2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்.5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்.6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்...
Friday, August 23, 2013
-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-
1)பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டீசலைப் (disel) பயன்படுத்தி இயக்க முடிவதில்லை ஏன்? பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் (fuels) கொண்டு இயங்கும் இரு பொறிகளும் உட்கனற்பொறிகளே (internal combustion engines). ஆயின் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை (ignition temperature) என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். அடுத்து பெட்ரோல் பொறியில் எரிபொருள்-காற்றுக்...
பழமொழிகளின் பழம்பொருண்மைகள்!
பழமொழிகளின் பழம்பொருண்மைகள் முன்னுரைநாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம்....
கவிதைகள்!
கவிதைகள் வாழ்க்கைஇன்று தவறிவிடும் லட்சியக்குறி நாளை காத்திருக்கும் கேள்விக்குறியாம்! புன்னகைபொதி சுமக்கும் கழுதை சிரித்தது...முதுகில் சுமையோடு பள்ளிக்கு போகும் குழந்தை! கடவுள்யார் சொன்னது கடவுள் இல்லையென்று?பார்த்தோம்...சிரித்தோம்...மகிழ்ந்தோம்...ஒரே வீட்டிலும் வாழ்ந்தோம் பெற்றோரை கடவுளுக்கு மேலாக நினைத்து... தேசிய கீதம்அரசியல்வாதிகளை நாற்காலியை விட்டு எழச் செய்து விடுகிறது தேசிய கீதம் நிலநடுக்கம்விண்ணை நோக்கி விதவிதமான அடுக்குமாடி வீடுகள்!சுமை தாங்காமல் சுளுக்கு விழுந்தது பூமிக்கு! ஒற்றுமைஅருகருகே இருந்தாலும் முட்டிமோதாது சுழலும் சமாதானம் மின்விசிறி! வெளிநாட்டு வேலைஉறவுகள் தொலைத்துகனவுகள் சுமந்துகாற்றினில் கலந்துஎல்லைகள் கடந்துவந்தேன் இங்கு...கிடைத்தது என்னவோஇலவச காற்று மட்டும்த...