
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. அதை பற்றி விசாரித்தால்,”‘‘நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும். உதாரணத்துக்கு...