.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 5, 2013

தெரிந்து கொள்வோம்..


பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸி கேட்( Seagate ) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.( MB )
முதன் முதலில் தங்களுக்கென ஓர் இணையதளப் பெயருக்கு விண்ணப்பித்தவர்கள் டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்(digital equipment corporation) ஆகும்.
ஐ.பி.எம் பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த 12 பொறியாளர்களை என்ன குறியீட்டுப் பெயர் கொண்டு அழைத்தார்கள் தெரியுமா? ‘தி டர்ட்டி டஜன்’ ( The Dirty Dozen )
VIRUS ன் விரிவாக்கம்( கண்டிப்பா 'நண்பன்' படம் சத்தியராஜ் பெயர் இல்லை )
Vital Information Resource Under Siege

SIM  ன் விரிவாக்கம் ( Sim card சொல்வோமே அதுதான் Simran இல்லப்பா.. )
Subscriber Identify Module


CD-ROM ன் விரிவாக்கம்

Compact Disk-Read Only Memory
ANSI ன் விரிவாக்கம்
American National Standards Institute
ASCII ன் விரிவாக்கம்
American Standard Code for Information Interchange
ATM ன் விரிவாக்கம்
Automated Teller Machine

அறுவைசிகிச்சை பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!



தற்போது நடைமுறையில் சுகப்பிரசவம் என்பது குறைந்து பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவம் தான் நடைபெற்று வருகின்றது.பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும்பொழுது சிக்கல் ஏற்பட்டால் தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர்.
ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே. ஆனால் உண்மையில் அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. அறுவைசிகிச்சை பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின்னர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
முதலில் அறுவைசிகிச்சைபிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது. அவ்வாறு அறுவைச்சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்பொழுது வயிற்றில் ஏற்படும் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும்.
அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் அறுவைசிகிச்சை செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது அறுவைசிகிச்சை வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
சுகப்பிரவத்தை விட அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும்.
ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது.
பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும்.
குறிப்பாக அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின்னர் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின்னர் சரியான ஓய்வு எடுக்காவிட்டால் இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும்.
மேலும் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் அறுவைசிகிச்சை செய்தால், பின் அதிகப்படியான பிதற்றல் ஏற்படும்.
அறுவைசிகிச்சை செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் அறுவைசிகிச்சையின் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.

.உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினையா!


உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.  மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.  இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.  இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.  எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.  1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.  2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.  3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.  4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.  உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.  5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.  6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.  உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.

விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை மறைக்க!


இரகசியமாக தகவல்களை கணினியில் சேமித்து வைக்க நாம் ஏதாவது ஒரு கோப்புகளை மறைக்கும் மென்பொருளை பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்துவதால் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகளை திருட ஹேக்கர்களுக்கு வாய்ப்பு அதிகம். சாதாரணமாக தகவல்களை மறைத்து வைக்க விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி இருக்கிறது.
 
விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option வசதியை பயன்படுத்தி எளிதாக கோப்புகளை மறைத்துவிடலாம். ஆனால் இதனை யார் வேண்டுமானாலும் ஒப்பன் செய்துவிட முடியும். என்பதால் கணினி பயன்பாட்டாளர்கள் இதனை கையாள மாட்டார்கள். விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option யை பயன்படுத்தி கோப்புகளை மறைத்துவிட்டு பின் இந்த Folder Option யை டிசேபில் செய்து விட்டால் எவராலும் நாம் மறைத்த கோப்பை எடுக்க முடியாது. ஆனால் நாம் கோப்பை மறைத்த வழியிலேயே சென்று Folder Option யை எனேபிள் செய்து விட்டால் மீண்டும் எடுத்து விடலாம் அதையும் தடுக்க ஒரு வழி உண்டு அவற்றை பற்றி கீழே விரிவாக காண்போம்
.
எப்போதும் போல எந்தெந்த கோப்பறைகளை மறைக்க விரும்புகிறீர்களோ அதன் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Properties என்னும் தேர்வினை கிளிக் செய்யவும்.
 


பின் General டேப்பினை தேர்வு செய்து பின்Attributes: என்னும் விருப்பதேர்வில் Hidden என்னும் டிக் பாக்சை டிக் செய்துவிட்டு பின் OK செய்து விடவும்.


பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து Tools மெனுபாரை கிளிக் செய்யவும். அதில் Folder Option என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். 


 
View என்னும் டேப்பினை கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Hidden files and folders என்னும் விருப்ப தேர்வில் Don't show hidden files,folders,or drives என்பதை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் மறைத்த கோப்பானது முழுமையாக மறைந்து விடும். இதே வழியில் சென்று Show hidden files , folders, or drives என்னும் தேர்வினை தேர்வு செய்யும்போது மறைத்து வைத்திருந்த கோப்புகள் அனைத்தையும் காண முடியும். 
 
இதனை தடுக்க Folder Option யை கணினியில் டிசேபிள் செய்து விட்டால் போதும். போல்டர் ஆப்ஷனை டிசேபிள் செய்ய Group Policy யை நாட வேண்டும். விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். ரன் விண்டோ தோன்றும் அதில் gpedit.msc என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.
 


தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும். User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் வலதுபுறம்  Removes the Folder Options menu item from the Tools menu என்னும் அமைப்பின் மீது இரண்டு முறை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் தேர்வினை கிளிக் செய்து OK பொத்தானை அழுத்தவும்.


இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Tools ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Folder Option நீக்கப்பட்டிருக்கும்.
 
இதையும் இதே வழியில் சென்று எனேபிள் செய்து விட்டு கோப்பினை எடுத்து விடுவார்கள் என்றால் நீங்கள் மற்றொரு பயனர் கணக்கினை விண்டோஸ் இயங்குதளத்தில் துவங்கவும். அது Standard user ஆக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். உங்களுடைய தற்போதைய பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கிவிடுங்கள். உங்கள் நண்பர்கள் யாரும் உங்கள் கணினியை பயன்படுத்தும் பட்டசத்தில் அவர்கள் புதியதாக உருவாக்கிய கணக்கில் நுழைந்து கணினியில் பணியாற்ற சொல்லுங்கள். அவர்களால் குருப்பாலிசியை ஒப்பன் செய்ய இயலாது. போல்டர் ஆப்ஷனை ஒப்பன் செய்ய இயலாது. நீங்கள் வழக்கம் போல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து பயன்படுத்துங்கள். கோப்பு தேவைப்படும் போது மேலே கூறிய வழியில் சென்று எனேபிள் செய்துவிட்டு கோப்பினை பயன்படுத்த முடியும்.
 
 
back to top