
முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று. இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா...