.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 26, 2013

தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு!

Solution to the problem of hair in 60 minutes


முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று.

இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா சீக்ரெட் பெண்கள் அழகு நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்மி.

இது குறித்து ஷர்மி கூறியதாவது: முன்பு பயப்பட வேண்டிய நிலையில் இருந்த தலை முடி பிரச்னைகள் தற்போது சாதரண விஷயமாகி விட்டது. கடந்த 22 வருடங்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் பலன் அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர். இந்த சிகிச்சையின் ரகசியம் எங்களது எண்ணெய் தான். ஆயுர்வேத முறைப்படி தகுந்த மூலிகைகள் மூலம் மிக சரியான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள எண்ணெய் மற்றும் ஹேர் பேக் மூலம் தலை முடி பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிறது.

நரையை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், அலர்ஜி ஏற்படும். எனவே தலை முடி பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த நிலையில் தலை முடி சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. ஒரு முறை அதுவும் ஒரு மணி நேர ஹேர் பேக்கேஜ் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆன தலைமுடி பிரச்னைகளையும் சரி செய்யலாம்.

சிகிச்சைக்கு வருபவர்களிடம், முதலில் என்ன காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அதற்கேற்ற ஹேர் மசாஜ் செய்யப்படும். பேன், பொடுகு உள்ளவர்களுக்கு அதற்கேற்ற மூலிகை பேக் போடப்பட்டு சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு பின்னர் கழுவி விடப்படும். இதை தொடர்ந்து வீட்டில் தினமும் பயன்படுத்த ஹேர் ஆயில், வாரம் ஒரு முறை பயன்படுத்த மூலிகை பவுடர் பேக், ஷாம்பு வழங்கப்படும்.

சொட்டவாளக்குட்டி’ @ நையாண்டி ஸ்பெஷல் ஆல்பம்!


தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் ‘நையாண்டி’. ‘களவாணி’ சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.’சொட்டவாளக்குட்டி’ என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. 


பின்பு ‘நையாண்டி’ என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு முன்னதாகவே தனது நையாண்டி படத்தை வெளியிடும் ஐடியாவில் இருக்கிறாராம் தனுஷ். 


இதனை மறை முகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படம் வெளி வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களே நீங்கள் எதிர்பார்க்கும் தினத்திற்க்கு முன்னதாகவே படம் வெளியாகலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் தனுஷ்.





வேகன் ஐஸ் கிரீம்!

 In a blender, add the frozen banana, the peanut butter, the cocoa powder and the vanilla essence and blend till smooth and all the ingredients have mixed well.




என்னென்ன தேவை?


மிகவும் கனியாத வாழைப்பழங்கள்-2
வேர்க்கடலை வெண்ணெய்-1 1/2மேஜைக்கரண்டி
கோகோ தூள்-3/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ்-3 சொட்டு
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு



எப்படி செய்வது?



ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவும்.

காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?




காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.


பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.



ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.



எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

 
back to top