.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 9, 2013

இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்தொகுப்பு!

இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்தொகுப்பு


 



 



 








 







 

 


அழகு ராணி - குட்டிக்கதைகள்!



Image hosted by Photobucket.com

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.

ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.

``நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.


``நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!'' என்றது எலி.

``மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.

``நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.

``என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது.

``ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.

``நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்'' என்றது எலி.

``எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.

``போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.

``நடுவராக நானிருக்கிறேன்!'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.

``நீங்கள் எப்படி?'' ஆச் சரியப்பட்டது குரங்கு.

``நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று காகம் தன் முகவரி கூறியது.

``அப்படியே செய்கிறோம்...'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.

மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.

அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.

``எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பல கீனமாக உதவி கேட்டது.

``நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.

குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.

``அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

``முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.
 
 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாறு!




திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன.

துப்பாக்கித் தொழிற்சாலையும், பொன்மலை இரயில்வே பணிமனையும், பொறியியல் கல்லூரியும் இந்நகரின் பிரமாண்டமான சிறப்புகள், தாயுமானவர் வாழ்ந்த பூமி இது.

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.

1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்கள்

மலைக்கோட்டை
ஸ்ரீரங்கம்
திருவானைக்கோவில்
முக்கொம்பு
கல்லணை
வயலூர் முருகன் கோயில்
கங்கை கொண்ட சோழபுரம்

திருத்தலங்கள்

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
அருள்மிகு உத்தமர் கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்

வேதியியல் துறையில் 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!


















வேதியியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆவார்கள். ரூ.7.75 கோடி ரொக்கப்பரிசை 3 பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.மூலக்கூறு வடிவமைப்பு மாதிரி ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக நோபல் பரிசு வழங்குகிற ராயல் சுவிடிஸ் அறிவியல் அகாடமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆகிய 3 விஞ்ஞானிகளும் ரசாயன செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், யூகிக்கவும் பயன்படுகிற விதத்தில் கணினிகளை மேம்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்; நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிற கணினி மாதிரிகள், ரசாயன துறையில் முன்னேற்றங்கள் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என கூறப்பட்டுள்ளது.

 
back to top