
45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ அல்லது உங்க அம்மாவிடமோ ஒரு திடீர் மாற்றத்தை காண்கிறீர்களா?..“ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க..”“முன்பு எல்லாம் சாதுவா இருப்பாங்க..இப்ப ரொம்ப கோவ படறாங்க…ஒரு சின்ன விஷயத்துக் க்கெல்லாம் கத்தறாங்க..பேசவே பிடிக்கல ரொம்ப சோம்பேறியாயிட்டா…எப்டி வேலை செய்வா இப்ப எப்ப பார்த்தாலும் மூதேவியாட்டம் படுத்துகிட்டே இருக்கா “இப்படி ஒரு சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்களா? கொஞ்சம் ரிலாக்ஸ் ..!அவங்க மெனோபாஸ் பீரியட்ல இருக்காங்க..!அவங்க உடம்புல பல விதமான ஹார்மோன்கள் படுத்தும் பாடின் வெளிப்பாடுதான் இந்த மாதிரியான கோபங்களும் எரிச்சல்களும்..பல பெண்களுக்கே தெரியாமல் அவஸ்தையுடன் அவர்கள் கடக்கும் பருவம் தான் இந்த மெனோபாஸ்...