.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 9, 2013

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர். இதில் வெற்றி கணக்கில் 6-3 என ஆனந்த் முன்னிலையில் இருக்கிறார். 20 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

24 கரட் தங்கத்தில் ஆப்பிள் தயாரிப்புக்கள்!

கைப்பேசி மற்றும் டேப்லட் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமொரு புது முயற்சியில் இறங்கியுள்ளது.


அதாவது 7.9 அங்குல அளவுடைய Retina தொடுதிரையினைக் கொண்ட 24 கரட் தங்கத்தினால் ஆன iPad Mini மற்றும் iPad Air சாதனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது.


இச்சாதனங்களின் விலையானது ஏறத்தாழ 1500 யூரோக்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேகமாக பரவி வரும் புது வைரஸ்! மக்களுக்கு எச்சரிக்கை...!


இன்றைக்கும் கணனி பயன்படுத்துவோர் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை எது என்றால் அது வைரஸ் தான்.

தற்போதைய நிலையில் பீ போன் என்ற புதிய வைரஸ் ஒன்று மிக வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஏறத்தாழ 20 பெயர்களில் கணனி சிஸ்டத்தில் தங்குகிறது.

இந்தியாவில் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று மற்ற வைரஸ்களையும் கணனியில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.

டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக கணனியில் இணைத்து எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.

விண்டோஸ் சிஸ்டம் கோப்புகளை அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும்.

நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ்(Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரைன் லாரா இந்தியா வருகை...! கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு...!



            மும்பையில், வரும் 14ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதியாட்டத்தை காண்பதற்காக, வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா இந்தியா வந்துள்ளார்.

           கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டல்கர், சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக டெண்டல்கர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
    
           அதன்படி, மஹாராட்டிராவில் உள்ள மும்பையில் வரும் 14ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டிஸ்ஸிற்கான இரண்டாவது இன்னிங்ஸ், சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சொந்த மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், 30 ஆயிரம் இருக்கைகள் கொண்ட வாங்டே மைதானம், முழுமையாக நிரம்பும் வகையில், டிக்கெட் விற்பனை வெகு வேகமாக விற்பனையாகி வருகின்றன.

            இந்நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெறவுள்ள சச்சினின் இறுதியாட்டத்தை காணும் ஆர்வத்துடன், வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாராவும், விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சச்சின் ஆட்டத்தை காண ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
 
back to top