.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 2, 2013

தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்…!

 ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன.அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது,இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டுபோகாதா என்று வியந்தான்.அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டுபோகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போதுஇந்த கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும்போது இந்தகயிறுகள் அறுக்கவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால்கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சிசெய்வதில்லை என்று பாகன் சொன்னான்.அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்தகயிற்றை அறுத்து கொண்டு போகலாம்...

குளிர்காலங்களில் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நலத்திக்கும் நாம் ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வியாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.குளிர்காலத்தின் வருகையானது நமது உடலில் உள்ள வலிமையான நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்கொள்ளும் ஏராளமான நோய்களையும் வியாதிகளையும் வரவழைக்கின்றது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இவை இரண்டும் நாம் குளிர்காலங்களில் எதிர்கொள்ளும் இடர்மிகுந்த நோய்களாகும்.இவை குளிர்மாதங்களில் நிலவி வரும் குளிர்ந்த வானிலையின் காரணமாக தடுபற்று வலிமை மிகுந்ததாக செயல்படும். நமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு...

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!

எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில்...

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்!

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும். 5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். 6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்...
Page 1 of 77712345Next

 
back to top