.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, December 5, 2013

கண்களால் நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்!

 

கடற்க்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், கடலும் வானமும் சேர்கின்றது அல்லவா? அதன் தூரம் 2.5 மைல்கள் தூரம். நீங்கள் உயரத்திற்குப் போகப் போக இன்னும் தொலைவுக்குப் பார்க்கலாம். காரணம் பூமி உருண்டையாக இருப்பதால்.


20 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 6 மைல்கள்.
300 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 23 மைல்கள்.
350 உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 80 மைல்கள்.
16.000 (விமானம்) உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 165 மைல்கள்.

இதுவே இப்படி என்றால் நீங்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால் அதன் கதையே வேறு, சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவில் உள்ள சந்திரனைப் பார்க்க முடியும்! அது மாத்திரமா? அதோ அந்த நட்சத்திரம்? அது கோடிக்கணக்கான மைல் தொலைவில் இருக்கின்றது, அதையும் நாம் பார்க்கின்றோம்.


அதற்காக ரொம்பத்தான் பெருமை கொள்ளாதீர்கள்.........


காரணம், உங்கள் பார்வையின் சக்தி நீங்கள் பார்க்கின்ற பொருளில் இருந்து வரும் ஒளியைப் பொருத்தது. பொருட்களுக்கும் உங்கள் கண்ணுக்கும் இடையில் இருக்கும் மீடியம் இதுவும் முக்கியம். ஐரோப்பாவில் சில நாடுகளில் பனிப்படலம் சூழ்ந்து கொள்ளும்போது, பகல் பன்னிரண்டு மணிக்கு நீங்கள் பிடிக்கும் சிகரட் முனையே உங்கள் கண்களுக்குத் தெரியாது!

இது எப்படி இருக்கின்றது

பகிர்ந்துகொள்ள !! - 5

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.


அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்


அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “


அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்

பகிர்ந்துகொள்ள !! - 4

ஹென்றி ஜீக்லண்ட் என்பவன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கடைசியில் கை விட்டு விட்டான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் கோபமடைந்த அவளது சகோதரன் தன் சகோதரியின் காதலனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தான். அவனைத் தேடிப் பிடித்துத் துப்பாக்கியால் சுட்டான்.


அவன் இறந்துவிட்டான் என்று சகோதரன் நினைத்துத் தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அந்தக் காதலன் இறக்கவில்லை. சகோதரன் சுட்ட குண்டு காதலனின் முகத்தை லேசாக உரசிச் சென்று அருகிலிருந்த மரத்திற்குள் பாய்ந்துவிட்டது.


பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் காதலன் ஜிக்லண்ட் குண்டு பாய்ந்திருந்த அந்த மரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்க்க தீர்மானித்தான். அந்த வெடிமருந்து வெடித்தபோது மரத்தில் தங்கியிருந்த குண்டு சிதறி ஜீக்லன்டின்

தலைக்குள் பாய்ந்தது. அந்த இடத்திலேயே அவன் மரணமடைந்தான்.


சகோதரன் அன்று கொல்ல முடியாததை மரம் நின்று கொன்றுவிட்டது!

பகிர்ந்துகொள்ள !! - 3


மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்.


"உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"


மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்"


"வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?"


"3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.


அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?"


அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?"


நேர்முகம் செய்தவர் Huh?Huh???
 
back to top