
கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இஃது அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. எனவே, குலோத்துங்கனுக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.“எப்பொழுதும் தன் மகளின் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதி, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நுாறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடிக்கவேண்டும். இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் அம்பிகாபதிக்கு அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று குலோத்துங்கன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்தான்.குறித்த நாளில் அனைவரும் கூடினர். அம்பிகாபதி சிற்றின்பம் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக்...