.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 30, 2013

மின்மினியின் காதல்....?




மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.



மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.


இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.


இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.


மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும்.


 பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.


பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும்.


 ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.


பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன. பரிணாம விதியில் இப்படி அழிவதும் சரிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆர்யா - விஜய்சேதுபதி கூட்டணியில் ஷியாம்...?




புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதியுடன் இணைகிறார் ஷியாம்.யுடிவி நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்.


புதிதாக அந்த படத்தில், ஆர்யா–விஜய் சேதுபதியுடன் ஷியாம் இணைகிறார்.சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை இது. அவருக்கு உறுதுணையாக இருக்கிறார், இன்னொரு இளைஞர்.


இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு பொலிஸ் அதிகாரி நிற்கிறார்.


அந்த பொலிஸ் அதிகாரி வேடத்தில், ஷியாம் நடிக்கிறார்.


படத்தின் கதாநாயகியாக கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


படப்பிடிப்பு ஜனவரி 14ம் திகதி பொங்கல் அன்று குலுமனாலியில் தொடங்குகிறது.


தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க....?




சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை.


வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.

தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.


ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை
இழக்க வேண்டியதில்லை.


எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில்
ஈடுபடாதீர்கள்.


அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். செயலுக்குத் திட்டமிடுங்கள். அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள்.

மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள்.


மனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள்.


மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக்  கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன. துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.

Sunday, December 29, 2013

கமலுடன் ஜோடி சேர காஜலுக்கு ரூ.2 கோடி...!




உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு 2 கோடி ரூபா சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

2004இல் இந்தி திரைப்படமொன்றில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2008ஆம் ஆண்டு வரை அவருக்கு பேசிக்கொள்ளும்படி திரைப்படங்கள் அமையவில்லை. 2009இல் மகதீரா (தமிழில் 'மகாவீரன்') தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது.

தமிழில் 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி', 'மாற்றான்', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக 'ஜில்லா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லிங்குசாமி தயாரிப்பில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது. அனுஷ்காவை பரிசீலித்தனர். ஆனால் அவர் தெலுங்கில் தயாராகும் இரண்டு சரித்திர திரைப்படங்களில் பிஸியாக நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.

இதனையடுத்து காஜல் அவர்வாலிடம் பேசினர். அவர் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்ததால் யோசித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.2 கோடி சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் இதையடுத்து 'உத்தமவில்லன்' திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
back to top