.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 31, 2013

தயிரின் அற்புதங்கள் !!!!




தயிரின் அற்புதங்கள்

''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே.

நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.

இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.

இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.


நன்மைகள்

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.

தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.

2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டுகிறார் அஜீத் - Latest News...








விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.



சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் 'வீரம்' படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு அஜித் உணவு பரிமாறினார்.கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். இது மெகாபந்தியாக இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர். 




இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.




படத்தில் அஜித் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். மேலும் ஒரு காட்சியில் 2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.அந்தக் காட்சி முடிந்ததும் "பிஎம்டபிள்யூ ஓட்டுனவனை மாட்டு வண்டி ஓட்ட வச்சுடீங்களேப்பா" என்று கிண்டலாக அஜித் சொன்னது யூனிட்டில் சிரிப்பை வரவழைத்தது என்று சிறுத்தை சிவா கூறினார்.

மும்பைக்கு டாடா விஜய் பட லொகேஷனை மாற்றினாரா முருகதாஸ்..?




துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார்.


படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த தலைவா பட ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது. அதேபோல் அஜீத் நடித்த ஆரம்பம் படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல கோலிவுட் படங்களுக்கு மும்பை பிரதான லொகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது.


தற்போது ஜில்லா படத்தில் நடித்து வரும் விஜய் இப்படத்தையடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் ஷூட்டிங் லொகேஷனை கொல்கத்தாவுக்கு மாற்றி இருக்கிறார்.


 ஸ்கிரிப்ட்டை ஒரு பக்கம் மெருகேற்றிக் கொண்டிருக்கும் முருகதாஸ், தனது உதவி இயக்குனர்களுடன் கொல்கத்தா சென்று ஷூட்டிங்கை நடத்துவதற்கான பிரதான இடங்களை தேர்வு செய்து வருகின்றார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.

எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை...?



எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை


எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" எனதினிய தோழமைகளே எண்ணங்களை கவனமுடன் தேர்வு செய்யுங்கள்.

நம் வாழ்வு சிறப்புற வேண்டுமெனில் நமது எண்ணங்களை நாம் சீர்செய்தாக வேண்டும்.

எண்ணங்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.

கோபம், குரோதம், பொறாமை, பிறரை வசை பாடுதல், கவலை, துக்கம், சோகப் பாடல்கள் கேட்பது, பிறரது அனுதாபத்தை எதிர் பார்ப்பது, சோம்பேறித் தனம், மனதை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது, சுத்தமில்லாதிருப்பது.

சுருங்கச் சொன்னால் மனதை எதிர் துருவத்தில் வைக்காதிர்கள் {negative} காரணம் நாம் எந்த எண்ணங்களைக் கொண்டோமோ அதே எண்ணங்களைச் சார்ந்த சம்பவம் நம் வாழ்வில் நிகழும்.

"கெட்டதை நினைத்தால் கெட்டது தான் வந்து சேரும்" நம்மிடமிருந்து புறப்பட்ட எண்ணங்கள் பிறரை தாக்கலாம் அல்லாது தாக்காமலும் போகலாம் { அது அந்த எண்ணங்களை எதிர்கொள்பவர்களின் மன வலிமையைப் பொருத்தது}.

ஆனால் எவரிடதிளிருந்து அந்த எண்ணம் புறப்பட்டதோ அந்த நபரை அந்த எண்ணம் நிச்சயம் தாக்கியே தீரும்.

நல்ல எண்ணம் நன்மையை பயக்கும்,
தீய எண்ணம் தீமையை பயக்கும்.

ஒருவன் தன் வாழ்வில் கெட்டுப்போவதற்கும், சிறப்பாக வாழ்வதற்கும் இதுதான் காரணம் என்பதனை உணர்வீராக.

இதனை உணர்த்தவே "வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு" என்ற சிவவாக்கியமும் இதனை மீண்டும் உறுதி செய்கின்றது.

எண்ணங்களை வானை நோக்கி உயர்த்துங்கள், உங்கள் வாழ்வும் வானவு உயர்ந்து செல்வதை உணர்வீர்கள். எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்.

வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.
 
back to top